நாட்டில் ஏற்பட்டுள்ள அடைமழை, நிலச்சரிவு, வெள்ளம் ஆகியவற்றிட்கு பல இலட்சம் மக்கள் முகம் கொடுத்து பல
உயிர்களை இழந்து பரிதவித்து நிற்கும் நிலையில்,அனர்த்தங்கள் இடம்பெற்ற இடத்திலிருந்து செல்பி எடுத்து ஒருசிலர் மகிழ்வதை சிங்கள ஊடகம் ஒன்று புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.
இதை பார்க்கும் போது இப்படியும் மனிதர்களா? என எண்ணத்தோன்றுகின்றது.
அனர்த்த இடங்களை பார்வையிட சென்றவர்களே இவ்வாறு செல்பி எடுத்து வருவதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
புத்தளம்,கொழும்பு,அரநாயக்க ஆகிய இடங்களுக்கு செல்லும் குழுவினரே இவ்வாறு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல இலட்சம் உறவுகள் அனர்த்தத்தால் நாளைய நாளை கேள்விக் குறியோடு பார்க்கும் அவலத்தின் மத்தியில் எமது நாட்டு மக்களின் இவ்வாறான செயற்பாடுகள் மனிதாபிமானம் மலிந்து விட்டதை உணர்த்துகின்றது
No comments:
Post a Comment