ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மேலதிகச் செயலாளர் ரோஹண கீர்த்தி திசாநாயக்கவின் வீட்டுக்கு கல்லெறிந்து தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
கண்டி, தங்கொல்லையில் அமைந்திருக்கும் கீர்த்தி திசாநாயக்கவின் வீட்டின் மீது கல்லெறித்தாக்குதல் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை இச்சம்பவம் நடைபெற்ற போது ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் வீட்டில் இருக்கவில்லை. அவரது மனைவி தாக்குதல் சம்பவம் குறித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
கல்லெறித் தாக்குதல் காரணமாக கீர்த்தி திசாநாயக்கவின் வீட்டின் கண்ணாடி ஜன்னல்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment