ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவு நாளை கிழக்கு பல்கலைகழக கலைகலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வொன்று பல்கலை வளாகத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது.
இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி ஈகச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிழக்கு பல்கலைகழகத்தில் மூவின சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்றுவரும்வேளையில் இவ்வாறான நிகழ்வுகளுக்கு தமிழ் மாணவர்களே கலந்துகொண்டுவரும் வேளையில் இவ் வருடமும் தமிழ் மாணவர்கள் சமூகத்தினர் கலந்துகொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வு செய்வதில் புலனாய்வுத்துறையினர் மற்றும் ஏனையவர்களின் கெடுபிடிகள் அதிகம் காணப்படுகின்ற நிலையில் இந் நினைவேந்தல் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் அமைதியாக உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்தனைகள் நடைபெற்று நிறைவடைந்தது.

No comments:
Post a Comment