October 8, 2015

இலங்கையின் பொதுத் தேர்தல் கண்காணிப்பு அறிக்கை 17ஆம் திகதி வெளியிடப்படும்! ஐரோப்பிய ஒன்றியம்!

இலங்கையில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் தொடர்பில் தமது கண்காணிப்பு இறுதியறிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு மையம் எதிர்வரும் 17ஆம் திகதியன்று வெளியிடவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

இந்த அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் தலைமைக் கண்காணிப்பாளர் கிறிஸ்டின் பிரேடா  இலங்கை அரசாங்கத்திடமும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கவுள்ளார்.

கடந்த ஜூலை 15ஆம் திகதியன்று அமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பகம்  22 மாவடங்களில் 85 கண்காணிப்பாளர்களை பணிகளில் அமர்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment