யாழ்.பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் புதிதாக திருமணமான தம்பதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கணவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான மாதவ மணிவண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த சனிக்கிழமை இரவு கணவன், மனைவி இருவரும் தேநீர் அருந்துவதற்காக யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தேநீர் சாலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்தில் மதுபோதையில் இருந்த சிலர் அவர்கள் இருவரையும் தகாத வார்த்தைகளால் ஏளனம் செய்து அவர்களை தாக்கிக் காயப்படுத்தியிருந்தனர்.
தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் கணவன், மனைவி ஆகிய இருவரும் யாழ். போதனா வைத்தியசா லையில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே கணவரான தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் மாதவ மணிவண்ணன் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயி ரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் இரு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதைய டுத்து எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் மு.கேசவன் உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன் குறித்த தினத்தன்று சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை மன் றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதி வான் பணித்துள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக மேலும் ஒரு சந்தேக நபரை நேற்றுக் கைதுசெய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளாகவும் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யு.கே.வுட்லர் மேலும் தெரி வித்தார்.
No comments:
Post a Comment