யாழில் 27 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம் மாவட்ட சிறுவர் அலுவலக மேம்பாட்டு அதிகாரி வி.கௌதமன் தெரிவித்தார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
யாழ் மாவட்டத்திலே கடந்த 06 மாதங்களில் 27 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்டத்தின் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பாகவுள்ள அலுவலகர்களிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன.
கடந்த 03 வருடங்களில் 167 சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. அந்தவகையில் 2013 ஆம் ஆண்டு 71 துஷ்பிரயோகங்களும் 2014ம் ஆண்டு 69 துஷ்பிரயோக சம்பவங்களும் 2015 ஆம் ஆண்டு ஐூன் மாதம் வரை 27 துஷ்பிரயோக சம்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யாழ் மாவட்டத்தில் இளம் வயது திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் என்பன தொடர்பில் கடந்த 2013ம் ஆண்டு 104 சம்பவங்களும், 2014ம் ஆண்டு 83 சம்பவங்களும், 2015ம் ஆண்டு ஐூன் மாதம் வரை 29 சம்பவங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் யாழ் மாவட்டத்திலே கடந்த 2009ம் ஆண்டு ஆயிரத்து 17 சிறுவர்களும் 2014ம் ஆண்டு ஆயிரத்து 71 சிறுவர்களும் 2015ம் ஆண்டு ஐனவரி மாதம் வரை ஆயிரத்து 156 சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் கௌதமன் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment