September 1, 2015

வித்தியா கொலை வழக்கு மீண்டும் சந்தேகநபர்கள் சிக்கலில்.!

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட ஒன்பது பேரின், இரத்த மாதிரிகளை தனியார் இராசாயண பகுப்பாய்வு நிறுவனதிற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 


மேலும் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கடந்த மே மாதம் 14ம் திகதி புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார். 

இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஒன்பது சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றார்கள். 

இவர்களின் இரத்த மாதிரிகளை பெற்று, மரபணு பரிசோதனைக்குட்படுத்துமாறு கடந்த வழக்கில், ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். 

இதன்பிரகாரம் இரத்த மாதிரிகளை பெற்றுக் கொண்டு, சட்ட வைத்திய அதிகாரி மயுரதன் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். 

இதனையடுத்து குறித்த இரத்த மாதிரிகளை தனியார் இரசாயண பகுப்பாய்வு நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டதுடன், 9 நபர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment