தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் வடமாகாணசபையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையகம் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை வலியுறுத்தும் என நம்பப்பட்டு வந்த நிலையில் உள்ளக விசாரணை பொறிமுறை வலியுறுத்தப்படும் நிலையில் உள்ளக விசாரணை பொறிமுறையினை எதிர்த்து இன்றைய தினம் நடைபெற்ற மாகாணசபையின் 34 வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அமர்வுக்கு முன்னதாக சபா மண்டபத்திற்கு முன்பாக சர்வதேச விசாரணை கோரும் பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்.
எனினும் மற்றய உறுப்பினர்கள் எவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் சற்று நேரத்தின் பின்னர் முதலைமச்சர் ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய சிவாஜிலிங்கம் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார்.
No comments:
Post a Comment