முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மோசடிகளை வெளிப்படுத்தியதனால் தன்னிடம் 100 மில்லியன் கேட்டுள்ளார் எனவும், கொள்ளையடித்த பணம் போதவில்லையா என மக்கள் விடுதலை முன்னணி
தலைவர் அநுர குமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடரந்து கருத்து வெளியிட்டவர், நான் மஹிந்த ராஜபக்ச தொடர்பில் வெளியிட்டவைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் 100 மில்லியன் பணம் வழங்க வேண்டுமாம்.
கொள்ளையடித்தவைகள் போதவில்லையா என எனக்கு அவரிடம் கேட்க வேண்டும். போதாமையினால் தான் என்னிடமும் கேட்கின்றார்.
மஹிந்த ராஜபக்ச அவர்களே நீங்கள் எனக்கு எதிராக தாக்கல் செய்யும் வழக்கினை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள விரும்புகின்றேன்.
நீதிமன்றிற்கு சென்று நீதிபதி முன்னிலையில், ஊடகவியலாளர்களையும் வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு தெரியும் வகையில், ராஜபக்சவும், அவரது குடும்பமும், அவரது குழுவும் இந்நாட்டிற்கு செய்திருக்கும் குற்றங்கள் தொடர்பில் ஒன்று ஒன்றாக கூறுவதற்கு நான் ஆயத்தம்.
நான் ஆயத்தமாகவே உள்ளேன், ராஜபக்ச அவர்களே முடியும் என்றால் வாருங்கள். மஹிந்தவுடன் எழும்ப வந்தவர்கள் தற்போது மஹிந்தவை எழுப்ப முயற்சித்துக்கொண்டுள்ளார்கள்.
அது மாத்திரமின்றி இனவாதத்தையும் தூண்டுகின்றார், வடக்கில் புலி வருகின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பு நாட்டின் பிரிவை கேட்கின்றது என மஹிந்த பிரச்சாரம் செய்து வருகின்றார்.
இனவெறியை பயன்படுத்தி ராஜபக்ச அரசியலை நடத்தி செல்ல முயற்சிக்கின்றார் என மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment