யாழ்.குருநகர் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நடத்துமாறு, யாழ் நீதவான்
நீதிமன்ற நீதிபதி பொ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
சடலத்தை இன்று காலை சட்டவைத்திய அதிகாரியுடன் சென்று பார்வையிட்ட நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்ததோடு, உயிரிழந்தவரின் மனைவியிடம் வாக்குமூலமும் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, நீதவானின் உத்தரவிற்கமைய சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
யாழ்.குருநகர் பகுதியில் அமைந்துள்ள சனசமூக நிலைய கட்டிடத்தில் இருந்து குறித்த சடலம், இன்று காலை கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment