August 23, 2015

யுத்தக்குற்றத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்க நிஷாபீஷ் சிறிலங்காவுக்கு விஜயம்!

யுத்தக்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிசா பீஸ்வால் சிறிலங்காவுக்கு விஜயம் செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
 
அடுத்தமாதம் யுத்தக்குற்ற அறிக்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு முன்னர் சிறிலங்காவை யுத்தக்குற்றங்களில் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் விருப்பப்படி சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது.

இந்த அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே அமெரிக்க இனி செயற்படும் என்று கூறப்படுகிறது.

இதற்காகவே நிசாபீஷ்வால் தூது அனுப்பப்படுகிறார்

No comments:

Post a Comment