அரசியலில் நீங்கள் புதுமுகம் என்ற வகையில் உங்களைப் பற்றி? பிறப்பு, கல்வி, போராட்ட வாழ்க்கை ,சமூக சேவை?
நான் கிளிநொச்சி மாவட்டத்தின் மருத நகர் என்ற கிராமத்தில் பிறந்தேன். எனது தந்தையார் ஒரு சாரதி அத்துடன் விவசாயி. தாயார் வீட்டுப் பணியில்
ஈடுபட்டிருப்பவர்.எனது சகோதரி மாவீரா் கப்டன் துளசிராம் தம்பி இறுதி யுத்தத்தில் மாவீரா்.தரம் 1 தொடக்கம் 10 வரை கிளி- புனித திரேசா பெண்கள் கல்லூரியில் கற்று வந்தேன். போர்ச் சூழல் காரணமாக அதற்குப் பின்னர் கல்வியினைத் தொடர்க்கூடிய வாய்ப்பு எனக்குக் இருக்கவில்லை. இராணுவ நகர்வுகள், விமானக் குண்டு வீச்சுக்கள் ஷெல் தாக்குதல்களால் எமது இயல்பு வாழ்க்கை பாதிப்படைய இவற்றிற்கெதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். அப்போது என்னுடைய வயது 15 மட்டுமே. ஆரம்பப் பயிற்சிகளின் பின்னர் நான் விடுதலைப் புலிகளினால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்த கற்றல் கூடத்திற்கு அனுப்பப் பட்டேன். அங்கே என்னுடன் சேர்த்து பல ஆண் பெண் போராளிகளிற்கு ஆங்கில மொழி கற்பிக்கப்பட்டது. காலப் போக்கில் எங்களில் சிலருக்கு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டோம். பெறுபேறுகளின் அடிப்படையில் நான் தொடர்ந்து உயர் தரப் பரீட்சை எழுதுவதற்குப் அனுமதிக்கப்பட்டேன். தொடர்ந்து கணனிக் கற்கை நெறியினை வன்னி தொழில் நுட்பக் கல்லூரியில் நான் கற்றுக் கொண்டேன். தொடர்ந்து 2005ம் ஆண்டின் பிற்பகுதியில் எனது குடும்ப நிலவரம் கருதிநான் அமைப்பிலிருந்து விலகிக் கொண்டேன். ஆங்கில மொழியிலும் கணினியிலும் தேர்ச்சி இருந்தமையால் அமைப்பிலிருந்து விலகிய சில நாட்களுக்குள் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனமொன்றில் பணி ஒன்றினைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு இருந்தது. ஆரம்பத்தில் சுனாமியில் பாதிகப்பட்ட பிரதேச அபிவிருத்தி சார்ந்து நான் பணிபுரிந்தேன். பின்னர் போரினால் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வாதார அபிவிருத்திமற்றும் இளையோர் திறன் விருத்தி போன்றதிட்டங்களை முன்னெடுத்து செயற்படுத்தி வந்தேன். இந்த நிலையில் 2008ம் ஆண்டின் பிற்பகுதியில் அரசாங்கத்தின் கண்டிப்பான உத்தரவுக்கமைய அனைத்துத் தொண்டு நிறுவனங்களும் வெளியேற்றப்பட்டன. அந்த நிலையில் நாங்கள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரான திரு.தேவநாயகன் அவர்களின் கீழ்மனிதாபிமானப்பணித் தொண்டர்களாக வன்னிப்பகுதியில் எமதுபணியினைநாம் தொடர்ந்தோம். பாதுகாப்பு வலயமென இறுதியாக அரசால் அறிவிக்கப்பட்ட கரையோரப் பிரதேசத்தில் குடி நீரைப் பெற்றுக் கொள்வதென்பது மிகவும் கடினமாக இருந்த வேளையில் எமது நிறுவனத்தின் வாகனங்களைப் பயன் படுத்தி எமது தொண்டர்களுடன் இணைந்துகுடிநீர் வழங்கும் சேவையில் ஈடுபட்டு வந்தேன். 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி நாங்கள் இருந்த பிரதேசம்இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஐந்து நாட்களின் பின்னர் ஆனந்தக்குமாரசுவாமி முகாமிற்கும் ஏனைய நலன்புரி முகாம்களுக்கும் மக்கள் அனுப்பப்பட்டனர். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட 10 ம் நாளில் எமது முகாமில் இருந்தபல முன்னாள் போராளிகள், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். நானும் அவர்களுள் ஒருத்தி. பெண் போராளிகள் பம்பைமடு தடுப்பு முகாமிற்குக் கொண்டுசெல்லப்பட்டோம். அங்கே சுமார் 2000ற்கும் அதிகமான பெண் போராளிகள் இருந்தனர். கட்டம் கட்டமாக அவர்கள் விடுவிக்கப்பட்டு வந்த நிலையில் ஒன்றரை வருடங்களிற்குப் பின்னர் 2010.10.15 அன்று நான் அங்கிருந்து விடுதலை செய்யப்பட்டேன்.2009களுக்கு முன்னர் போராளிகளிற்கு எத்தகைய கௌரவம் சமூகத்தால்வழங்கப்பட்டதோ அதற்கு நேர்மாறான நிலை 2010களின் பின்னர் ஏற்பட்டது. ஒரு சில போராளிகளைத் தவிர பெரும்பாலானவர்களிற்கு தமது வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதில் மிகுந்த இடர்கள் ஏற்பட்டன. ஏற்பட்டு வருகின்றன. அதிலும் தமது அங்கங்களை இழந்த போராளிகளின் நிலைமை மிகவும் மோசமானது.
தற்போதைய தமிழ் அரசியல் சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?
2009களின் முன்னர் எமது மக்கள் முன்னுரிமைப் படுத்தியது போராட்டஅரசியலைத் தான் என்பது தெளிவானஒரு விடயம். போராட்டம் பின்னடைவிற்குச் சென்றதன் பின்னர் போர்க் களத்தினுள்ளேயே வாழ்ந்த எமது மக்களின் மன நிலை நீண்ட காலமாக ஒரு ஸ்திரத் தன்மையில் இருக்கவில்லை. இறுதிக் கட்டப் போரில்அவர்களின் கண் முன்னால் நடந்த கோரங்கள் இறுதி வரை அவர்களது மனதை விட்டு அகலப் போவதில்லை என்பது நிச்சயமான ஒன்று.
மக்கள் முகாம்களில் அடைக்கப்பட்டு ஏறக்குறைய 7 மாதங்களின் பின்னர்2010இல் ஜனாதிபதித் தேர்தல் வந்ததுஅதனைத் தொடர்ந்து 2010 ஏப்ரல் மாதத்தில் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் ஒருங்கே சந்தித்து சொந்த நாட்டில் ஏதிலிகள் மன நிலையில் இருந்த மக்கள் இவ்விரு தேர்தல்களிலும் அவ்வளவாக தமதுஆர்வத்தைச் செலுத்தவில்லை. இருப்பினும் 2010 இல் பொதுத் தேர்தலை எதிர்கொண்ட மக்கள், விடுதலைப் புலிகளால்உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது வாக்குகளை அளித்து ஐவரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர். அதனை விட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் போட்டியிட்ட ஈழமககள் ஜனநாயகக் கட்சியில் இருந்து மூவரையும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஒருவருமாக மொத்தம் 9 பேரை பாராளுமன்றம் அனுப்பி வைத்தனர். யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இம்மூன்று கட்சிகளும் சாதித்தது என்ன? தமிழ் மக்களுக்கான அரசியல்தீர்வினைத் தான் அவர்களால் எட்ட முடியவில்லை. அவர்களுக்கான வாழ்வியல் பிரச்சனைகளுக்காவது ஒரு தீர்வைக் காணமுடிந்ததா?
புலம் பெயர்ந்த உறவுகளிடமிருந்து வரும் நிதிகளை ஒருங்கிணைத்து நிச்சயமாக குறித்த ஒரு தொகையிலான மக்களதுவாழ்வாதாரப் பிரச்சனைகளிற்கு தீர்வுகண்டிருக்க முடியும். ஆனால் அவ்வாறுசெய்யப்படவில்லை. மக்கள் அபிவிருத்திக்கென வழங்கப்பட்ட நிதிகள் கூட ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களாலும் அவரவர்களது அரசியல் எதிர்கால நோக்கம் கருதிய செயற்பாடுகளிற்கே பயன்படுத்தப்பட்டன. 2009களிற்கு முன்னால் தமது தேவைகளிற்காக பிறரிடம் கையேந்தும் மக்கள் சமூகம் எம்மிடம் இருக்கவில்லை. ஆனால் இப்போது அவ்வாறு இல்லை. 1000 ரூபா 2000 ரூபா உதவிகளிற்காக எவ்வளவோ தொலைவில் இருந்து அரும்பாடுபட்டு வரும்மக்களைத் தான் இந்தக் கட்சிகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அத்தகையமக்களின் ஏழ்மையை, இயலாத்தன்மையினை தமது அரசியல் இலாபங்களிற்காகப் பயன்படுத்து வர்களாகத்தான்எமதுதமிழ்அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள் என்பது வெளிப்படை. தமது அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் என்று கருதப்படுவோர்க்கு மாத்திரமேஅரச வேலைகளையும் ஏனைய வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொடுக்கின்றனர்.
அத்துடன் தமிழர் பிரதிநிதிகள்எனக் கூறப்படும் பெரும்பாலான தற்போதைய அரசியல்வாதிகள், எவ்வாறெனினும்எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையினை ஒரு காலகட்டத்தில் எதிர்த்தவர்கள். காலச் சுழலில் அவர்களைத் தமது பிரதிநிதிகளாக ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் தமிழர்களுக்கு ஏற்பட்டு விட்டது.இந்த நிலையில் மக்களிற்கான விடுதலைப் போராட்டத்தை எதிர்த்தவர்கள் எவ்வாறுஅந்த மக்களிற்கான உரிமைப் போராட்டத்திற்கு உதவ முடியும் என்பது வெளிப்படையான நெருடல். மொத்தத்தில் தற்போதைய தமிழ்அரசியல் சுழ்நிலையென்பது தமிழ் மக்களிற்கான நிலையான அரசியல் தீர்வினை நோக்கி மையம் கொள்ளாமல், தமது காலங்களை பாராளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து அந்த வரப்பிரசாதங்களையும் கௌரவங்களையும் அனுபவிப்பதற்கான காலம் நீடிப்பு அரசியலாக மாறிவிட்டது என்பதுதான் உண்மை. இது நிச்சயமாக மாற்றப்பட வேண்டிய ஒன்று.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழ் மக்களது ஐக்கியத்தைக் குலைக்கின்றனர். பேரம் பேசும் ஆற்றலைச் சிதைக்கின்றனர் என்ற குற்றச் சாட்டினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைக்கின்றனர். அதற்கு என்ன பதில் கூறப்போகின்றீர்கள்?
இந்தக் கூற்றில் உண்மை இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மக்களிற்கான கடமைகளை சரியான முறையில் செய்திருந்தால் இந்தக் குற்றச் சாட்டினை முன்வைத்திருக்கத் தேவையில்லை.ஒரு விடயத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமிழ் தேசியத்தின் பின்னால் தான் நிற்கின்றார்களே தவிர தமிழ் கூட்டமைப்பிற்குப் பின்னால் அல்ல. அவர்கள் இதுவரை காலம் வாக்களித்து வந்தது தமிழ் தேசியத்திற்கேயன்றி தமிழ் கூட்டமைப்பிலுள்ள அரசியல் வாதிகளுக்கல்ல. இந்தக் கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி அங்கத்தவர்கள் யாருமே வெளிப்படையாக மறுக்கப்போவதில்லை. எனவே தேசியத்தின் பெயரால் வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் அதனைப் பின் பற்றி யிருந் தால் மக்களது ஐக்கிய சிதைக்கப்படுகிறது என்று கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மக்களது உரிமைகள் சார்ந்து எந்தப் பேரத்தையும் பேசப் போவதில்லை வெளிப்படை. இனிஅவர்கள் பேரம் பேசுதல் என்ற விடயத்தைக் கையில் எடுப்பார்களாயின் அது எமது உரிமைகளை விற்பதற்கான பேரம்பேசலாகத்தான் இருக்குமே தவிர வேறெதற்காகவும் இல்லை. ஆகவே இந்த இரு குற்றச்சாட்டுகளையும் மக்கள் கருத்தில் எடுக்கப்போவதில்லை என்பது நிதர்சனம்.
போரினால் பாதிக்கப்பட்ட முக்கிய மாவட்டம். கிளிநொச்சி. அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் எவையென நீங்கள் அடையாளம் காணுகின்றீர்கள்?
உண்மை. போரினால் முற்று முழுதாகச் சிதைக்கப்பட்ட மாவட்டம் கிளிநொச்சி. கீழ்க்காணும் விடயங்கள் தொடர்பில் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றார்கள்
வீடு இன்மை – கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இந்திய வீட்டுத் திட்டத்தினூடாகவும், ஐரோப்பிய யூனியன் வீட்டுத்திட்டங்கள் மற்றும் வேறு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் வீட்டுத் திட்டங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆயினும் சில புள்ளித் திட்டங்கள் பேணப்படுவதனாலும் காணியின்மைகள் காரணமாகவும் போரினால் பாதிப்படைந்த குறித்த எண்ணிக்கையிலான மக்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. கால நிலை மாற்றங்களின் போது அந்த மக்கள் படும்துன்பங்களை நான் நேரில் பார்த்திருக்கின்றேன். தற்காலிக நிவாரணங்கள் அவர்களின் துயர்களை மாற்ற மாட்டாது. எனவே இந்த வீடில்லாப் பிரச்சனைகளிற்கு தீர்வு காணப்பட வேண்டும்.
தகுந்த வாழ்வாதாரமின்மை:
2009களின் முன்னால் விடுதலை புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிக்குள் நாங்கள் ஒரு பிச்சைக்காரரைக் கூடக் காண முடியாது. வீடுகளில் ஓய்ந்திருந்த மனிதர்கள் காணப்படவில்லை. எவ்வளவோபொருளாதாரத் தடைகள், இராணுவ நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும் மக்கள் மத்தியில் பசி, பட்டினி, தொழிலின்மை போன்ற விடயங்கள் இருக்கவில்லை. ஆனால் போர் முடிவுற்ற பின்னர் மக்கள்எதிர் நோக்குகின்ற பாரிய பிரச்சனையாக தொழிலின்மை இனங்காணப்பட்டிருக்கின்றது. அதைவிட லஞ்சம், ஊழல், பால்நிலை துஷ்பிரயோகங்கள், சிறுவர்துஷ்பிரயோகங்கள் கலாச்சார ஒழுங்கீனங்கள் போன்ற விடயங்களிலும் மக்கள் பாரிய பிரச்சனைகளை எதிர் நோக்குகின்றார்கள்.

கிளிநொச்சி மாவட்டப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு என்ன திட்டங்களை நீங்கள் முன்மொழிகின்றீர்கள்?
பிரச்சனைகள் சார்ந்து அடிப்படை தரவுகள் சேகரிக்கப்பட்டு மக்களது பங்களிப்புடன் ( Participatory Approach) உரியதிட்டங்கள் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுவதன் ஊடாக பல பிரச்சனைகளிற்குத் தீர்வு காண முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கின்றது.

நீங்களும் ஒரு முன்னாள் போராளி என்ற வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் போராளிகள் எதிர் நோக்கும் நெருக்கடிகள் யாவை?
- முதலாவதாக பாதுகாப்பு என்ற விடயத்தில் பல தரப்பட்ட நெருக்கடிகள் இருக்கின்றன. ஒவ்வொரு போராளியும் வெவ்வேறு வடிவங்களில் அதனை எதிர்கொள்கிறார்கள்.
அடுத்ததாக தமது நாளாந்த வாழ்வினைக் கொண்டு செல்லக் கூடிய தகுந்த தொழில் வாய்ப்பின்மை அதனால் ஏற்படும் மனவுளைச்சல், குடும்பங்களிற்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவையும் முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுள் பிரதானமானவையாகும். எமக்கு மக்கள் அங்கீகாரம் கிடைக்கும் பட்சத்தில் முன்னாள் போராளிகளிற்கான தொழில் முயற்சிகள் சார்ந்து ஆக்க பூர்வமான, நடைமுறைச் சாத்தியமான விடயங்களை முன்னெடுக்க முடியும் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.
சி.அ. யோதிலிங்கம்
No comments:
Post a Comment