யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பிரதேசத்தில் வைத்து ஊடகவியலாளர் ஒருவர் போதையில் நின்ற இருவரால் தாக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டுப் பிரதேசத்தில் வைத்து போதையில் நின்ற இருவரால் பிராந்திய செய்தியாளரும், சுயாதீன ஊடகவியலாளருமான ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
செய்தி சேகரிக்கச் சென்ற சமயம் நடுவீதியில் வைத்து வழிமறித்த இருவர் குறித்த ஊடகவியலாளரை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளாலும் ஏசி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். தாக்கப்பட்ட குறித்த ஊடகவியலாளர் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு நேற்றைய தினம் வீடு திரும்பியுள்ளார்.
மதுபோதையில் நின்ற நபர்களை பொலிஸார் கைது செய்து பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருவதோடு, குறித்த நபர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment