August 1, 2015

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை! காணாமல் போனோருக்கு நட்டஈடு!- முல்லைத்தீவில் அள்ளி வீசினார் ரணில்!

இனப்பிரச்சினையை புண்ணாக வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென்றும் மிக விரைவில் அதற்குத் தீர்வு காண்பதே தமது நோக்கமென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முல்லைத்தீவில் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவைப் போன்று உண்மையைக் கண்டறியும் ஆணைக் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாகவும் அதன் மூலம் பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது, காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள புதிய அரசாங்கத்தில் புதிய சட்டம் ஒன்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு அமைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் முன்னியவளை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், டி.எம். சுவாமிநாதன், வேட்பாளர்களான ஜனகன், விஜிந்தன், ரோஹன கமகே உட்பட வேட்பாளர்கள், முக்கியஸ்தர்களுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இப்பிரசாரக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்
ranill

No comments:

Post a Comment