மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் கொம்மாதுறை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் அரசாங்கப் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கொம்மாதுறையை சேர்ந்த கலையரசி பாலச்சந்திரன் (வயது 58) எனும் ஆசிரியையே விபத்தில் பலியானவர் என்று செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4.20 மணியளவில் நெடுஞ்சாலையின் ஓரமாக உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்த போது வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்புப் பக்கம் எதிரே வந்த கென்ரர் ரக வாகனம் ஆசிரியரை மோதியது என்று தெரிவிக்கப்படுகிறது.
பாதசாரியை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தைத் தேடிவருவதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment