இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்கத் தூதுவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதுல் கேஷாப் நியமிக்கப்பட்டுள்ளார்.றிச்சேர்ட்
ராகுல் வர்மாவுக்கு பின்னர் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்திய வம்சாவளியாக அவர் பதிவாகியுள்ளார்.
போரின்போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்குமான நம்பகமான, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான வசதிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இலங்கையின் இன மற்றும் மதக்குழுக்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதுடன் நீடித்த சமாதானத்தை கட்டியெழுப்ப உதவி வழங்க விரும்புவதாகவும் அதுல் கேஷாப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து சவால் மிக்க விடயங்கள் ஊழலுக்கு எதிராக போராடுதல், ஊடகத் தணிக்கை தசாப்த கால யுத்தில் இருந்து மீளும் நீண்ட கால செயற்பாடுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக அதுல் கேஷாப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்தல் சிவில் சமூகம் மற்றும் ஊடக சுதந்திரம் மத சுதந்திரமுள்ளிட்ட மனித உரிமை விடயங்களில் இலங்கை மக்களிற்கு உதவ விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
44 வயதான அதுல் கேஷாப் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் இதற்கு முன்னர் பணியாற்றியிருந்தார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவராக அதுல் கேஷாப் நியமிக்கப்படுவதற்கு அமெரிக்க செனட் சபை நேற்று புதன் கிழமை அனுமதி வழங்கியிருந்தது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்தியாசிய விடயங்களிற்கான பிரிவில் பிரதி உதவி அரச செயலாளராக அவர் தற்போது பணியாற்றி வருகின்றார்.
1994 ஆம் ஆண்டு வெளிவிவகார சேவைத்துறையில் அவர் சேவையில் இணைந்து கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட அதுல் கேஷாப் மற்றும் வர்மா ஆகியோர் இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவர்களாக செயற்பட்டிருந்தனர்.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை புதுடெல்லியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பிரதி அரசியல் கொன்சியூலராக அதுல் கேஷாப் பணியாற்றியிருந்தார்.
No comments:
Post a Comment