வீதியால் சென்ற மினி பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றவர்களை மோதியதுடன் பஸ்ஸும் வயலில் தடம்புரண்டதால் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுக்கு உள்ளாகினர். இதில் ஆறு பேர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் சங்கானை நகரப் பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது.மாதகலில் இருந்து வேகமாக சங்கானை நகரை நோக்கி வந்த மினிபஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியோரமாக இருந்த இருவரை மோதியதில் ஆண் ஒருவரின் கால் முறிந்துள்ளதுடன் பெண் ஒருவர் முகத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதேவேளை பாதையை விட்டு விலகிய மினி பஸ் குளத்திற்கு அருகில் உள்ள வயல் வெளியில் தடம்புரண்டதில் பஸ்ஸில் இருந்த குழந்தை உட்பட இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
சிறு காயங்களுக்கு உள்ளாகியவர்கள் சங்கானை மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்கள். வட்டுக்கோட்டை பொலிஸார் விபத்து சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்
No comments:
Post a Comment