கல்கிஸ்ஸ பகுதியில் கடலில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் காணாமல் போயுள்ளனர்.இன்று பிற்பகல் 12.15 மணியளவில் இந்த இரு மாணவர்களும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிஸ்ஸ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரே கடலில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இன்று காலை பாடசாலை சென்ற மாணவர்கள் இருவரும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இடைநடுவில் பாடைசாலையிலிருந்து கடலில் நீராடச் சென்றுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களைத் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment