போதுமான அரசியல் முதிர்ச்சியற்றவர்களே தன் மீது இணையத்தளங்களில் அவதூறு பரப்பி வருவதாக வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.
போதுமான அரசியல் முதிர்ச்சியற்ற, எதையும் ஆராய்ந்து பார்க்க தெரியாத சிறுகுழுவொன்று இணையத்தளத்தில் உலாவிவருவதாகவும், அவர்கள் தமது சொந்த நலனினடிப்படையில் அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அனந்தி சசிதரன் கூறியுள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாக அறிவித்தது, பின்னர் அந்த முடிவை மாற்றி கூட்டமைப்பின் வேட்பாளர்கள் சிலரை ஆதரித்து பிரசாரம் செய்து வருவது என்பன தொடர்பில் சிலர் அநாகரிகமாகவும், உண்மைக்கு புறம்பான விதத்திலும் எழுதி வருவது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே இதனை கூறினார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சில ஜனநாயக விரோத நடவடிக்கைகளை தான் விமர்சிப்பது, தமிழ்தேசிய கூட்டமைப்பை ஜனநாயகமயப்படுத்தி, சகல கட்சிகளிற்கும் சமஅந்தஸ்து கிடைக்கச் செய்து மேலும் பலப்படுத்த மாத்திரமே என்று கூறினார்.
சில பிழைகளை சுட்டிக்காட்டினால், உடனே அவர் அரசிடம் பணம் வாங்கிவிட்டார் என கூறும் பாணி வழக்கமான எம்மவர் சிலரின் பாணிதான்.
இது பொருட்படுத்தத்தக்க அளவில் பெரிய தொகையல்ல. இந்தவகையானவர்கள் தமிழர் அரசியலிற்காக, மக்களிற்காக ஒரு சிறுதுரும்பையும் எடுத்து போட்டிருக்கமாட்டார்கள். இணையங்களில் போலி முகத்துடன் உலாவருபவர்கள். இவர்களை பொருட்படுத்த வேண்டியதில்லை என்று கூறினார்.
No comments:
Post a Comment