தனது மெய்பாதுகாவலராக இருந்த பெண் காவல்துறையை சேர்ந்த ஞானச்சந்திரன்
பகீரதியின் (வயது 26) மரணம் தொடர்பில் உரிய விசாரணையை மேற்கொண்டு, அது
கொலையா அல்லது தற்கொலையா
என்று கண்டுபிடிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அச்சுவேலியைச்சேர்ந்த ஞானச்சந்திரன் பகீரதி , தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை உயிரிழந்திருந்தார். அவரது மரணம் தொடர்பில் அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டுகையினில் பகீரதி விடயத்தில் காவல்துறையினர் சரியான முறையில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய குற்றவாளியை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த
வேண்டும். தனிப்பட்ட ரீதியில் பகீரதியைப்பற்றி தெரியும்.
தற்கொலை செய்யும் அளவுக்கு கோழைத்தனமான உத்தியோகத்தராக அவர் இருக்கவில்லை. அனைத்து
விடயங்களையும் பார்க்கும்போது பகீரதி, தற்கொலை செய்யவில்லை என்பது உறுதியாக தெரிகிறது. இது தொடர்பில் காவல்துறையினர் புலன் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளியினை கைது செய்ய வேண்டுஅமென அனந்தி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment