June 4, 2015

“ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ…” வித்தியாவின் கடைசிக் கதறல்!

“ஐயோ மாமா… என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ… நான் என்ன தவறு செய்தற்காக இப்படி துன்புறுத்துறீங்க… என்னை விட்டிடுங்க மாமா… ஐயோ என்னை போக விடுங்கோ மாமா” என அவள் மன்றாடினாள் என பாலியல் பலாத்காரத்தின் போது கதறியதாக சந்தேக நபரின் வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரம் கற்ற பதினெட்டு வயதேயான வித்தியாவின் வீடு ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.

வித்தியாவின் மூத்த சகோதரி யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் உயர் கல்வி கற்கிறார். மூத்த சகோதரன் கூலித்தொழிலாளி. அவளது தந்தை ஒய்வுபெற்ற அரசாங்க அலுவலகர்.

குறித்த தினம் பாடசாலைக்குச்சென்ற தனது மகள் வீடு திரும்பாததனால் கலவரப்பட்டுப்போன வித்தியாவின் தாய் சரஸ்வதி, மகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினாள்.

எனினும் அவளது தேடுதல் கைகூடவில்லை. சம்பவம் நடைபெற்று அடுத்த நாளே வித்தியாவின் உயிரற்ற சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

மகள் கொலையுற்றிருப்பதை அறிந்த சரஸ்வதி நிலை குலைந்து போனாள். தங்களுக்கு யார் எதிரியென்று சிந்தித்தாள்.

அப்போது பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது. திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவருக்கெதிராகத் தான் சாட்சியமளித்தமையே அது.

உடனே தாயான சரஸ்வதி அந்த சந்தேகத்தை பொலிஸாருக்குத் தெரிவித்தார். சந்தேகம் பொய்க்கவில்லை. பொலிஸார் சந்தேக நபரைப் பிடித்து முறையாக விசாரித்தபோது அவர் உண்மைகளைக் கக்கிவிட்டார்.

அனைவரது மனதையும் உலுக்கிவிட்டுள்ள புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டுள்ளவரின் வாக்குமூலம் இது.

குறித்த சந்தேகநபர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்.

‘திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் வித்தியாவின் தாயார் எனக்கெதிராக சாட்சியமளித்தார்.

அந்த வழக்கினால் நான் நெருக்கடிக்குள்ளாவேன். அதனால் நான் சிறை செல்ல வேண்டியும் வரலாம். அதற்காக சரஸ்வதியை பழிவாங்குவதற்காகத்தான் இவ்வாறு செய்தேன். அதனாலேயே வித்தியாவை கொலை செய்வதற்கு ஒப்பந்தம் செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

வித்தியாவின் அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவரே திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டிருந்தான். அது தொடர்பில் வித்தியாவின் தாய் சரஸ்வதி சாட்சியமளித்துள்ளார்.

அதனால் குறித்த நபர் சிறிது காலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டு வெளியில் வந்துள்ளான்.

பிணையில் வெளியில் வந்த அவன் சரஸ்வதியை பழிவாங்குவதற்கான உபாயங்களைத் தேடிக் கொண்டிருந்தான். அந்தப்பழிவாங்கும் குணம் மிகவும் கொடூரமாக இருந்தது.

தான் வழங்கும் தண்டனை சரஸ்வதியை (வித்தியாவின் தாய்) மாத்திரமல்லாது அந்த குடும்பத்தையே பாதிக்க வேண்டும் என எண்ணினான்.

அந்த வகையில் பதினெட்டே வயதான பாடசாலை மாணவி வித்தியாவே அதற்கான சிறந்த வழியாகக் கருதினான்.

அதனால் வித்தியாவை கொலை செய்யுமாறு தனது நண்பர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துள்ளான். வித்தியாவை கடத்தி கொலை செய்வதற்கு ஒப்பந்தம் வழங்கியவர் மாத்திரமல்லாமல் அவரது இரு சகோதரர்களும் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

ஒப்பந்தம் செய்வதில் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மூவரையும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் குவின்ஸ்டன் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழு கைது செய்துள்ளது.

கொலை செய்யப்பட்ட சிவலோகநாதன் வித்தியாவின் மரண விசாரணை நடத்திய யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யூ.மயூரன், பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி தலைப்பகுதி பலமாகத் தாக்குதலுக்குள்ளானதால் மரணம் சம்பவித்துள்ளதாக மரண விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாவை பாலியல் பாலாத்காரத்திற்குட்படுத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் ஐவரை புங்குடுதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் பி.எம்.ஹிரான் தலைமையிலான குழு கைதுசெய்துள்ளது.

சுவிற்சர்லாந்தில் வசிப்பவர் வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுவிற்சர்லாந்தில் காசாளராக தொழில்புரியும் குறித்த நபர், ஊர்காவற்றுறை பிரதேசத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சுவிற்சர்லாந்திலிருந்து விடுமுறையில் இங்கு வந்தபோதே குறித்த குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளார்.

வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது அதனை அவர் ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்து..

பாடசாலை மாணவி வித்தியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

குறித்த தினம் வேலைக்குச் செல்லமுன்னர் நாம் மதுபானம் அருந்தினோம். அதனால் போதை நிலையிலேயே இருந்தோம். சரஸ்வதியின் மகள் வித்தியா பாடசாலைக்கு போகும் வழியில் அவள் வரும்வரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அப்போது வித்தியா பாடசாலைக்குச் செல்வதற்காக சைக்கிளில் வருவதைக் கண்டோம். உடன் பாய்ந்து அவளைப் பிடித்தோம்.

வித்தியா ”ஐயோ வேண்டாம்” என சத்தம்போட ஆரம்பித்தாள். நாம் அவளை காட்டுக்குள் கொண்டு சென்றோம். எங்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள அவள் முயற்சித்தாள்.

எம்மைக் கடித்து தப்ப முற்பட்டாள். அதனால் அவள் தலையில் கட்டியிருந்த ரிபனை எடுத்து கையைக் கட்டினோம் அவளது முயற்சி தோல்வியடைந்தது.

அப்போது அவளை வெறுமனே கொலை செய்து விடாமல் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தி கொலை செய்யத்தோன்றியது.

துடிக்காமல் இருப்பதற்காக அவளது கால்களையும் கைகளையும் இழுத்து மரங்களில் கட்டினோம்…

”ஐயோ மாமா என்னை கஷ்டப்படுத்தாமல் போக விடுங்கோ…நான் என்ன தவறு செய்தற்காக இப்படி செய்றீங்க… என்னை விட்டிடுங்க… ஐயோ என்னை போக விடுங்க மாமா” என அவள் மன்றாடினாள்.

அப்போது அவள் அணிந்திருந்த உள்ளாடைகளில் ஒன்றை களைந்து அவளது வாய்க்குள் திணித்து மன்றாட்டத்தை அடக்கினோம்.

அவளது மன்றாட்டத்தை நாம் கணக்கெடுக்கவேயில்லை. காலை 7.45 தொடக்கம் மு.ப.11.30 வரை நாம் ஒருவர் மாறி ஒருவராக வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தோம்.

வலியால் துடித்த அவள் அடிக்கடி நினைவிழந்து போனாள். அவளது உயிர் அடங்கியிருப்பது விளங்கியபோது அணிந்திருந்த பாடசாலை சீருடையை சடலத்தின்மீது போட்டு விட்டு காட்டுக்குள்ளிருந்து நாம் வெளியேறினோம்.

பாடசாலைக்குச் சென்ற தனது மகள் வீடு திரும்பாததால் கலவரப்பட்டுப்போன சரஸ்வதி தனது மகளைத் தேடுவதற்கு ஆரம்பித்தாள். கிராமத்திலுள்ள அனைவரும் அந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊர் மக்களுடன் இணைந்து நாமும் வித்தியாவைத் தேடினோம்.எனினும் அடுத்த நாள்தான் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

நாமும் மரண வீட்டுக்குச் சென்று அவர்களுக்கு சகல விதத்திலும் ஒத்தாசை வழங்கினோம். வித்தியாவின் சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டிக்கருகில் சென்று அஞ்சலி செலுத்தினோம்.

வித்தியாவுக்கு நடைபெற்றுள்ள கொடுமை தொடர்பில் அவளது குடும்பத்தாரிடம் அனுதாபம் தெரிவித்தோம். எங்கள் மீது எவருக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதனாலேயே இவற்றையெல்லாம் செய்தோம்.

சரஸ்வதியின் மகளை கொலை செய்த பின்னரே பணம் வழங்குவதாக ஒப்பந்தம் வழங்கிய மூவரும் கூறியிருந்தனர். எனினும் பணத்தின் தொகையை குறிப்பிடவில்லை.

எவ்வளவு கிடைத்தாலும் பரவாயில்லை எனக்கருதியே வேலையை பொறுப்பெடுத்தேன். எனது நண்பர்களையும் இந்த வேலைக்காக இணைத்துக்கொண்டேன்.

ஆரம்பத்தில் வித்தியாவை பாலியல் பலாத்காரம் செய்யும் திட்டம் எம்மிடம் இருக்கவில்லை.அவளை பார்த்த பின்னர்தான் பாலியல் பலாத்காரம் செய்யத் தோன்றியது.

இவ்வாறு ஒப்பந்தத்தைப் பொறுப்பேற்ற பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வித்தியாவின் கிராமத்தில் கடல் மற்றும் கூலித்தொழில் செய்து சீவியம் நடத்துபவர்களே. அவர்களில் சிலர் திருமணமானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment