June 4, 2015

தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் அவர்களுடன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு!

தமிழ் இன உணர்வாளரும் இயக்குனருமான புகழேந்தி தங்கராஜ் அவர்கள் முதன் முதலாக கனடா வந்துள்ளார். அவருடனான ஊடகவியலாளர் சந்திப்பு வெள்ளிக்கிழமை ஜூன் மாதம் 5 ஆம் நாள் 305 Milner வீதியில் அமைந்திருக்கும் கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடகவியலாளர்கள் சந்திப்பு மண்டபத்தில் மாலை 8 மணிக்கு நடைபெறவுள்ளது. இவ் ஊடகவியலார் சந்திப்பில் கலந்து கொள்ள அனைத்து ஊடகவியளார்களும் அன்போடு அழைக்கப்படுகின்றார்கள்.

தமிழீழ விடுதலைப் போரை மையமாகக் கொண்ட  'காற்றுக்கென்ன வேலி' 'உச்சிதனை முகர்ந்தால்' திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, 'கடல் குதிரைகள்.'

இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் ஜூன் 7 ஆம் நாள் நடைபெறவுள்ள அவரது மூன்றாவது படைப்பான 'கடல் குதிரைகள்' திரைப்படத்தின் பாடல்களின் இறுவெட்டு வெளியீட்டு விழாவுக்காக கனடாவுக்கு வருகை தந்துள்ளார் என்பதும் தமிழர்களுக்காக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் தமிழின உணர்வாளர்களுள் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கனடியத் தமிழர் தேசிய அவை
தொலை பேசி: 416.830.7703 | மின்னஞ்சல்: info@ncctcanada.ca

No comments:

Post a Comment