வடக்கில் அதிகரித்து வரும் குழு மோதல்களின் தொடர்ச்சியாக கிளிநொச்சி
மலையாளபுரத்தில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற குழு மோதலில் நால்வர்
வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். மலையாளபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் சுகந்தன் (வயது 19), எஸ்.சாந்தன் (வயது 19), மணியண்ணன் பிரசாந்த் (வயது 19) ஆகியோரே வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் மூவரும் யாழ்.போதனா வைத்தியசாலையிலும் ரி.வினோதன் (வயது 21) என்பவர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment