மைத்திரி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்தினில் தமிழ் மக்களிற்கு உறுதியளிக்கப்பட்டவை நிறைவேற்றப்படவில்லை.அத்துடன் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குறுதிகள் தந்த மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் எந்தக்கரிசனையும் கொள்ளவில்லை யெனவும் இது தொடர்பினில் எதிர்வரும் 23 ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை ஆகியோருடன் பேச்சுவாத்தை நடத்தவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மாட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று செவ்வாக்கிழமை காலை தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் நடைபெற்றது இக் கூட்டத்தில் முக்கியமாக ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஜனாதிபதியின் 100 நாள் வேலைத்திட்டத்திலும், தேர்தல் காலத்திலும் கூறப்பட்ட விடயம் என்ன வென்றால் படையினர் ஆக்கிரமித்துள்ள தமிழ் மக்களுடைய நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்படும் மக்கள் மீள்குடியேற்றப்படுவார்கள் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வலி,வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் நிலத்தை படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றனர். அதில் அட்சிமாற்றத்தின் பின்னர் 563 ஏக்கர் நிலம் மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் கிழக்கு மாகாணத்திலே சம்பூர் பகுதியில் 876 ஏக்கர் நிலம் விடுவிக்கப்படும் என கூறப்பட்டு,வர்த்தமானி அறிவித்தலும் விடுக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறிய மக்களை பொலிஸார் துரத்தியடிக்கின்றார்கள்.
இதேபோன்று ஆட்சி பொறுப்பேற்றதன் பின்னர் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் படுவார்கள் என கூறப்பட்டபோதும் அவ்வாறு விடுவிக்கப்படவில்லை.
இவ்வாறு பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படாமை தொடர் பாக நாங்கள் பேசியிருப்பதுடன், இந்தப் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வினை கொடுக்கப்போகின்றீர்கள்? என்பது தொடர்பில் எதிர்வரும் 23ம் திகதியளவில் ஜனாதிபதி மற்றும், பிரதமர் ஆகியோரை சந்திக்க தீர்மானித்திருக்கின்றோமெனவும் மாவை.சேனாதிராசா தெரிவித்தார்.

No comments:
Post a Comment