இந்தோனேசியாவில் நிர்க்கதியான நிலையில் தத்தளித்து வரும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கடல் வழியாகவே மீளவும் திருப்பி அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாநில கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இந்தப் படகில் நிறைமாதக் கர்ப்பிணி ஒருவரும் 9 சிறுவர்களும் உள்ளடங்களாக 44 பேர் பயணித்துள்ளனர்.
இந்தோனேசிய மாநில மற்றும் மத்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இடையில் இந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதன் பின்னர் படகுப் பயணிகள் கரைக்கு அழைக்கப்பட்டு படகில் ஏற்பட்டு கோளாறு திருத்தப்பட்டு, எரிபொருள் நிரப்பப்பட்டு உணவையும் வழங்கி அவர்களை திருப்பி இந்தியாவிற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எப்போது இந்த படகு திருப்பி அனுப்பி வைக்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, இந்தோனேசியாவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment