வடக்கில் மட்டமான யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள் என முன்னாள் ராஜதந்திரியும் அரசியல் ஆய்வாளருமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
புரவெசி வலய அமைப்பின் அழைப்பாளர் சமன் ரத்னபிரிய எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைத் தெரிவித்துள்ளார்.
'தென் ஆபிரிக்காவில் போன்று உண்மை நல்லிணக்க ஆணைக்குழு ஊடாக தீர்வு காண முடியுமாயின் அது சிறந்ததே அதனையே நாம் விரும்புகின்றோம் எனினும், அவ்வாறு செய்ய முடியுமா? விசாரணை நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டும். அதேபோன்று இந்த விசாரணைப் பொறிமுறைமை ஏற்றுக் கொள்ளாவிட்டால் விசாரணையில் பயனில்லை. இலங்கையின் நீதிமன்றம் இந்த விசாரணைகளை நடாத்த பொருத்தமானதாக என்பது குறித்து எமக்கு பாரதூரமான கேள்வி காணப்படுகின்றது? என சமன் ரத்னப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.'
அதற்கு பதிலளித்த தயான் ஜயதிலக்க...
அரசியல் சாசானத்தின் அடிப்படையிலான இராணுவமொன்று பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்து, நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாத்துக் கொடுத்ததன் பின்னர் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு நீதவான்களைக் கொண்டு விசேட நீதிமன்ற விசாரணை உலகில் எந்தவொரு நாட்டிலும் நடைபெறவில்லை. அது விழுமியங்களுக்கு புறம்பானது.
வேறு எங்கும் செய்யாத ஒன்றைச் செய்ய முதலில் நாம் ஏன் கழுத்தைக் கொடுக்க வேண்டும்?
தென் ஆபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு காணப்பட்டது எனினும், விசேட நீதிமன்றம் நிறுவப்படவில்லை.
வட அயர்லாந்தில் பெரிய வெள்ளி உடன்படிக்கையில் விசேட நீதிமன்றங்கள் கிடையாது? ஏன் அவ்வாறு நிறுவப்படவில்லை?
விசேட நீதிமன்றங்கள் இல்லாத காரணத்தினால் இந்த உடன்படிக்கை வெற்றியளித்தது.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் ஒரு பகுதியில் மட்டுமா இருந்தார்கள்? அப்படியானால் கெபதிகொல்லாவ பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறு எனக்கு சொல்லிக் கொண்டே போக முடியும்.
இராணுவத்தில் சேவையாற்றியோர் மற்றும் அவர்களது குடும்பங்களை எடுத்துக் கொண்டால் அவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனாக இருக்கும்.
அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு விசேட நீதிமன்றம் அமைக்க அவர்கள் விரும்புகின்றார்களா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தயவு செய்து விசேட நீதிமன்றங்கள் அமைத்து விசேட சட்டத்தரணிகள் நீதவான்களைப் பயன்படுத்தி தண்டனை விதிக்க முயற்சிக்க வேண்டாம் என தயான் தயதிலக்க மிகவும் ஆக்ரோசமாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது இந்த கேள்வி எழுப்பப்பட்டு, பதிலளிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment