June 16, 2016

நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் - பிரான்ஸ்!

நல்லிணக்க முனைப்புக்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் தெரவித்துள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரான்ஸ் தூதுவர் Jean Marin Schuh இதனைத் தெரிவித்துள்ளார்.



தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் மனித உரிமை விவகாரங்களில் காண்பித்து வரும் முனைப்புக்களுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


நல்லிணக்க முனைப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே இலங்கையுடனான உறவுகளை மேலும் பிரான்ஸ் வலுப்படுத்திக் கொண்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் வெறும் தாள்களுக்கு மட்டும் வரையறுக்கப்படாது செயற்பாட்டு ரீதியிலும் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.


அண்மையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான அலுவலகம் அமைக்கும் முயற்சி வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment