June 17, 2015

சிங்களத்திற்கு தாரைவார்த்துப் புதைக்கும் அதிகாரம் சுரேன் – அடிகளார் கும்பலுக்கு இல்லை!

உலகத் தமிழர் பேரவையுடனான இலண்டன் பேச்சுவார்த்தையில் ஒரு நாட்டுக்குள் தீர்வு காணுவதற்கும் வன்முறையை எதிர்காலத்தில் நாடுவதில்லை என்றும் பகிரங்க வாக்குறுதியொன்றை உலகத் தமிழர் பேரவையிடம் பெறுவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடந்ததாக மங்கள
சமரவீர தெரிவித்திருக்கின்றார். இலண்டன் கூட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்கமளிக்கும் போதே இவர் இதனை தெரிவித்திருக்கின்றார். இந்த அணுகுமுறையை வெளிப்படுத்தும் விதத்தில் உலகத் தமிழர் பேரவை ஏற்கனவே பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது என்றும் மங்கள சமரவீர தனது உரையில் சுட்டிக் காட்டியிருந்தார். அந்தப் பந்தி இதோ:
“Finally, I would also like to inform the House that we discussed about a public declaration renouncing violence as a means of achieving political objectives and a public commitment to a united and undivided Sri Lanka. The recent statement by Rev. Fr. S.J. Emmanuel, President of the GTF and Mr. Suren Surendiran reflect this welcome shift in attitude. I now table some of these recent statements.”
உலகத் தமிழர் பேரவையோடு ஊடாட்டம் வைத்துக் கொள்வதற்கான முன்நிபந்தனையாக ஒரு நாட்டுக்குள் தீர்வு காணுவதற்கு இணங்குவோம் என்பதை உலகத் தமிழர் பேரவை பகிரங்கமாக சொல்ல வேண்டும் என்று மங்கள முன் வைத்துள்ளார். (அவர்கள் மீதான தடையை நீக்குவதற்கான முன் நிபந்தனையாகவும் இருக்கலாம்). தனி நாட்டுக் கோரிக்கையை விடுவதற்கு பதிலீடாக ஒற்றையாட்சியைக் கைவிடுவோம் என்பது தொடர்பில் பகிரங்க அறிக்கை விடுவதற்கு மங்கள சமரவீர தயாரா? வன்முறையைக் கைவிடுவோம் என்பதற்கு பதிலீடாக இராணுவத்தை விலக்கிக் கொள்வோம் என்ற பகிரங்க பிரகடனத்தை செய்ய மங்கள தயாரா? இதனை உலகத் தமிழ்ப் பேரவையினர் கேட்டார்களா? இல்லாட்டி வழமை போல ஒற்றை வழி உரையாடல் (one way monologue) தானா எங்களுடைய இராஜதந்திரம்?
இது இராஜதந்திரம் என்றால் என்ன என்று தெரியாதவனது சிறுபிள்ளைத்தனமான கேள்விகளாக கொள்ளப்படலாம்.
வட்டுக்கோட்டையில் தீர்மானித்ததை 1977 பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை, கருத்துக் கணிப்பு மூலம் தீர்மானித்ததை சிங்களத்திற்கு தாரைவார்த்துப் புதைக்கும் அதிகாரம் சுரேன் – அடிகளார் கும்பலுக்கு இல்லை. ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பின் மூலமே அதை மீண்டும் முடிவு செய்ய முடியும் என பல மக்கள் தமது கருத்தை தெரிவித்துள்ளனர் .
சட்டத்தரணி குருபரன் குமாரவடிவேல் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட பதிவின் ஒரு பகுதி இது .

No comments:

Post a Comment