உலக புகையிலை ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அலுவலத்தினரால் நேற்று திங்கட்கிழமை காலை விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிராந்திய
பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி மத்தியகல்லூரியில் நிறைவுபெற்றது.பேரணியில் கலந்துகொண்டவர்கள்,“உலகில் அபிவிருத்தி அடைந்தநாடுகளில் வாழும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்போம்” “புகையிலை கம்பனிகளால் மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொண்டுவருவோம்“,‘நாளொன்றுக்கு 60 இலங்கையர்களை கொலை செய்வதுடன் (வருடத்தற்கு 20000 பேர்) அதற்குபதிலாக 80 சிறுவர்களையாவது புதிதாக பழக்கமுற்படும் சிகரட் கம்பனிகளின் பிடியிலிருந்து சிறுவர்களை பாதுகாப்போம்’ ‘சிகரட் விற்பனையைத் தவிர்த்து தேசப்பற்றோடு செயற்படும் வியாபாரிகளை ஊக்குவிப்போம்’ என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதாரசேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் தொற்றாநோய்ப்பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் பிராந்திய பிரதிசுகாதாரசேவைகள் பணிப்பாளர், தொற்றாநோய்பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சானிக்கபெர்ணான்டோ, கிளிநொச்சி உளநலமருத்துவ அதிகாரி மருத்துவர் ஜெயராசா, மலேரியா தடுப்புபிரிவினர், மாவட்டத்தின் நான்கு சுகாதார மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment