June 17, 2015

டென்மார்க் நாடாளுமன்ற தேர்த்தலும் ஈழத்தமிழரும்!

டென்மார்கில் வாழும் ஈழத்தமிழருக்கு இது ஒரு முக்கியமான தேர்தலாக அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழினம் புலம்பெயர்ந்து டென்மார்க் வந்து  கால் நூற்றாண்டை கடந்துள்ள நிலையில் தமிழினம்
சந்திக்கும் ஒருமுக்கிய தேர்தல் இதுவாகும். இன்று டென்மார்க்கில் வாழும் வெளிநாட்டவர்கள் பட்டியலில் முதல் இடத்தை தக்கவைத்துள்ள தமிழ் இனம் கல்வி, பொருளாதாரம், தொழில், இணைவாக்கம் போன்ற விடயங்களில் முதலாமிடத்தை பிடித்து ஏனைய  இனங்களுக்கு முன்மாதிரியாக திகழ்கின்றது. இந்த நிலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல இந்த தேர்தல் தமிழ்மக்களுக்கு ஒரு முக்கியமானதொன்றாக உள்ளது. ஏனெனிலில் அதற்கு சான்றாக இந்த தேர்தலில் இரண்டு ஈழத்தமிழ் இளைஞர் போட்டியிடுவதோடு டெனிஸ் அரசியல் வாதிகளும் தமிழ்மக்களை  நாடிவந்து வாக்கு கேட்பதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த மூன்று பத்தாண்டுகளாக தமிழ்மக்கள் டென்மார்க்கை வந்தடைந்து வாழத் தொடங்கியிருந்தாலும் தற்போதைய சூழலிலேயே மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான அவர்களின் பங்குபற்றல் சிறப்புமிக்கதாக உள்ளதை காணக்கூடியதாக உள்ளது. எதிர் வரும்18ம் நாட்களில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் கடந்த பல ஆண்டுகளாக தமிழீழமக்களின் நீதிக்காக குரல் கொடுத்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழீழத்தமிழர்களின் நலன் சார்ந்த கருத்துக்களை உடையோரும், குரல் கொடுப்போரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.  அத்துடன் தமிழ்மக்களுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் குரல்கொடுத்து வரும் டெனிஸ் மக்களுடன் முதன்முறையாக டென்மார்க் தமிழர்களும் இணையவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியிடும் திரு கஜேந்திரன் சிறிசுரேந்திரன் (SF- Vest Jylland Store kreds ) மற்றும் திரு கஜேந்திரன் வேல்முருகன்  (Radikale venstre Nordjylland store kreds இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இடுகின்றார்கள் என்பது தமிழினத்திற்கு இனத்துக்கு மெருகூட்டும் செயலாகும் என்பதை தமிழ் மக்கள்  உணர்ந்து செயல்பட வேண்டியது அவர்களின்  கடமையாகின்றது. புலம்பெயர் வாழ்வில் தமிழ்மக்கள் வாழும் நாட்டு மக்களோடு பழக, பேச மொழி  ஆற்றல் தடையாக இருந்தாலும் அடுத்துவரும் சந்ததி இதனால் வருங்காலத்தில் நன்மையடையக் கூடிய வகையில் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ்மக்கள் இன்று வழியமைக்க வேண்டியவர்களாக  உள்ளனர்.
சனநாயக அடிப்படையில் நடைபெறவுள்ள இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைக் கொண்டுள்ள அனைவரும் தமது வாக்குரிமையைப் முழுமையாகப் பயன்படுத்துதல் அவசியம். இவ்வாறான பங்குபற்றுதல் ஊடாக டென்மார்க் நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதுடன் தமிழீழமக்களின் நீதிக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகளைக் கட்சிவேறுபாடு இன்றித் தெரிவுசெய்யும் பொறுப்பு டென்மார்க் தமிழ்மக்களிடத்தில் உண்டு.
Gagendran Srisurendran (vestjylland Storkreds) (SF)  தமிழ் மக்களில் 40 வீதமானோர் வாழ்கின்ற பகுதியில்  (vestjylland Storkreds- Herning, Ikast-Brande, Ringkøbing-Skjern, Skive, Holstebro, Viborg, Silkeborg, Stuer, Lemvig) அவர்கள் போட்டியிடுகின்றார்.
GiajenthiranVelmurugan-(NordjyllandsStorkred)(RadikaleVenstre)  (அவர்கள்  Aalborgkredsen -Frederikshavnkredsen. Hjørringkredsen. Thistedkredsen. Himmerlandkredsen. Mariagerfjordkredsen. Brønderslevkredsen. பகுதியில் போட்டியிடுகின்றார்
Nikolaj villumsen- பாராளுமன்ற உறுப்பினர் ; (Enhedslisten ) (Østjylland Storkreds) தமிழ் மக்கள் கணிசமானவர்கள் வாழ்கின்ற பகுதியான Aarhus. Randers. Silkeborg. Horsens. Skanderborg. Favrskov. Odder. Samsø. Norddjurs. Syddjurs இல் போட்டியிடுகின்றார்.
Troels Ravn  பாராளுமன்ற உறுப்பினர்   (Sydjyllands Storkreds)(s) தமிழ் மக்கள் கணிசமானவர்கள் வாழ்கின்ற பகுதியான .GRINSTED.BILLUND Varde.Vejen .Vejle.Fredericia Sønderborg. Aabenraa. Esbjerg. Kolding Haderslev Esbjerg. Omegns.  இல் போட்டியிடுகின்றார்.
Pernille Skipper பாராளுமன்ற உறுப்பினர் (Fyn )(Enhedslisten ) தமிழ் மக்கள் கணிசமானவர்கள் வாழ்கின்றபகுதியான.GRINSTED.BILLUND Varde.Vejen .Vejle.Fredericia Sønderborg. Aabenraa. Esbjerg. Kolding Haderslev Esbjerg. Omegns.   இல் போட்டியிடுகின்றார்.
Rasmus Helveg Petersen காலநிலை, எரிசக்தி மற்றும் கட்டிடங்கள் அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர் (Sjælland)  (Radikale Venstre)  Holbækkredsen. Køgekredsen. Grevekredsen. Roskildekredsen. Kalundborgkredsen Ringstedkredsen. Slagelsekredsen. Næstvedkredsen. Lollandkredsen டென்மார்க் தமழ் மக்களில்  கணிசமானவர்கள் வாழ்கின்ற   பகுதியில் போட்டியிடுகின்றார்.
Maria Reumert Gjerding  ( Enhedslisten) Nordsjællands Storkreds டென்மார்க் தமழ் மக்களில்  கணிசமானவாழ்கின்ற பகுதியில் போட்டியிடுகின்றார்  Nordsjællands Storkreds-Helsingørkredsen. Fredensborgkredsen.HillerødkredsenFrederikssundkredsen, Egedalkredsen.Rudersdalkredsen
அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழினத்தைக் காப்பற்றும் பொறுப்பினைக் கொண்டுள்ள புலம்பெயர் தமிழ்மக்கள், தாம் வாழும் நாடுகளில் சனநாயக அடிப்படையிலும் அறவழிகளிலும் தமது  விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற காலம் இதுவெனக் கருதுகின்றனர்.
சனநாயகம் மதிக்கப்படுகின்ற டென்மார்க் நாட்டில் அந்நாட்டின் வளர்ச்சிக்காகவும் தமிழீழமக்களின் நீதிக்காகவும் குரல் கொடுத்து வருகின்ற பிரதிநிதிகளை மக்கள் தெரிவுசெய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இனைப்புகள்,
தேர்தலில் பங்கெடும் வேட்ப்பாளார்கள் தமது ஈழத்தமிழர் நிலைப்பாடு பற்றிய காணொளிகள் :
Rasmus Helveg Petersen fra Radikale Venstre stiller op i Sjællands Storkreds:

Trols Ravn fra Socialdemokratiet stiller op i Sydjyllands Storkreds:https://www.youtube.com/watch?v=w9K7JLUjVMg

Nikolaj Villumsen fra Enhedslisten stiller op i Østjyllands Storekreds:https://www.youtube.com/watch?v=gxhBmiIZMSE

Pernille Skipper fra Enhedslisten stiller op i Fyns Storkreds:https://www.youtube.com/watch?v=VkvdFROEcx0

Maria Reumert Gjerding fra Enhedslisten stiller op i Nordsjællands Storkreds:https://www.youtube.com/watch?v=-dsuuARF-9c

Gagendran Srisurendran (vestjylland Storkreds) (SF)
Pernille Skipper, Enhedslisten
Pernille Skipper, Enhedslisten
Trols Ravn untitled (2)Rasmus Helveg PetersenNikolaj villumsenMARIA-NORDS SJÆLLANDGiajenthiranVelmuruganuntitled (4)


No comments:

Post a Comment