தாய்த் தமிழகத்தின் இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் காலமான செய்தி எம்மை மிகவும் அதிர்ச்சிக்கும் ஆழ்ந்த வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. அன்னார் திரையுலகத்தில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நடிகராகவும் சிறப்புப் பெற்று இருந்ததுடன் மக்கள் மனங்களில் நீங்காத ஓர் இடத்தையும் பெற்றிருந்தார்.
தன்னை ஒரு கலையுலகிற்குக் காட்டி நின்ற அதேவேளை, எமது தமிழினப் போராட்டத்தில் இணைத்து தமிழ் உணர்வாளர் என்ற நிலையை எடுத்துக் காட்டியவர். எம் தமிழீழத் தாயகத்தில் சிறிலங்கா அரசு செய்த கொடிய இனவாதப் போரை எதிர்த்தவர். உணர்வு என்ற நிலைக்கு அப்பால், நான் தமிழன் என்ற நிலைக்கு அப்பால் ஒரு தனிமனிதனுக்கு இருக்கவேண்டிய அத்தனை நற்பண்புகளையும் கொண்ட தமிழீழ உணர்வாளனாக இருந்தவர்.
அவருடைய இந்த உணர்வுகளை பல மேடைகளில் வெளிப்படுத்தியுள்ளார். ஓரிடத்தில் அவரது உரை இவ்வாறு அமைந்திருந்தது. ' நான் ஈழத்தில் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் எமது தமிழீழத் தேசியத் தலைவரின் போராட்ட அணியில் இணைந்து ஒரு விடுதலைப் போராளியாக நின்று போராடி மாவீரனாகி இருப்பேன். என்ன பாவமோ நான் தமிழகத்தில் பிறந்துவிட்டேன். தமிழகத்தில் இன்று நடைபெறும் அரசியல் அநாகரிகத்தைப் பார்க்கும் போது நான் வெட்கப்படுகின்றேன். கேடுகெட்ட அரசியல் வாதிகளைப் பார்க்கும் போது என்னால் என்ன கூறுவது என்று புரியவில்லை. எனது நெஞ்சு வெடித்துவிடும் போல இருக்கின்றது. ஆனால், இந்த அரசியல் நிலைப்பாட்டால் எனது உயிர் போனாலும் நான் அச்சப்படவில்லை. அப்படி எனது உயிர் போகுமிடத்தில் எனது உடலுக்கு புலிக்கொடி போர்த்தியே எனது இறுதி நிகழ்வை நடத்தவேண்டும் " என்று மணிவண்ணன் ஆணித்தரமாக வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன், புலிக்கொடி எங்கும் பறக்கவேண்டும். தமிழன் வீரம் சொல்லவேண்டும். நான் இதனைப் பார்ப்பதற்கு இல்லாவிட்டாலும். இதுதான் நிஜம். எனது ஈழ உறவுகள் நின்மதியாக ஈழம் பெற்றே வாழ்வார்கள். அவர்களுக்கு எம் மக்களின் ஆதரவு என்றும் உண்டு என்றும் அவர் கூறிச் சென்றுள்ளார்.
ஆரம்பத்திலேயே ஓர் இடது சாரிக் கொள்கை உள்ளவராகவும் இருந்துள்ளார். இதுவரை 50 திரைப் படங்களை இயக்கியதுடன் நிற்காது 400 இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் பல வேடங்களிலும் நடித்து தனது நடிப்புத்திறமையையும் மெய்ப்பித்துள்ளார்.
இவர் இயக்கிய 'அமைதிப்படை" என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரைக் கொடுத்தது. நீண்ட இடைவெளிக்குப்பின் அண்மையில் 'அமைதிப்படை பாகம் 2" இனை 'நாகராஜ சோழன்" என்ற பெயரில் இயக்கி அதில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றிருந்த நிலையில், அவர் இன்று எம்மை விட்டுச் சென்றுள்ளார்.
அவருடைய இழப்பானது ஈடுசெய்ய முடியாத ஒன்றாக உள்ளது. இனமான இயக்குநர் மணிவண்ணன் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், தமிழின விடுதலை உணர்வாளர்கள், தமிழ்நாட்டு மக்களுடன் நாமும் துயரினை பகிர்ந்து கொள்வதோடு, இன்று “தமிழின உணர்வாளர்’’ என்கின்ற உயரிய மதிப்பளித்தலை பெற்றிருப்பதோடு அவர் எதிர்பார்த்த எண்ணங்கள் ஈடேற நாம் தொடர்ந்து பயணிப்போம் அதுவே நாம் அவருக்கு செய்யும் உறுதிமொழி என எடுத்துக்கொள்கிறோம்!
“ தமிழரின் தாகம் தமிழிழீழத்தாயகம் ’’
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சு.

No comments:
Post a Comment