June 13, 2015

கள்ளக்காதலியிடம் இருந்து கணவனை மீட்க மந்திரவாதியை நாடிய இளம் பெண் மீது துஷ்பிரயோகம்!

கணவரின் கள்ளக்காதல் தொடர்பை நிறுத்த வீட்டில் யாகம் நடத்த ஏற்பாடுகளை செய்த 22 வயதான இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மந்திரவாதியை கைது செய்ய களுத்துறை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணவன் கள்ளக்காதல் தொடர்பை துண்டிக்க 22 வயதான இளம் மனைவி வீட்டில் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடுகளை செய்திருந்தார்.
வீட்டில் யாகத்தை நடத்திய மந்திரவாதி அதே சமயத்தில் இந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
யாகத்திற்காக எனக் கூறி இளம் பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்ற மந்திரவாதி, அந்த பெண்ணை கடுமையாக வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் கணவரையும் அவரது கள்ளக் காதலியையும் செய்வினை மூலம் நாய்களாக மாற்ற முடியும் என மந்திரவாதி கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் காவற்துறையில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான மந்திரவாதிகள் ஏற்கனவே சில பெண்களை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக அவருக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment