June 13, 2015

விடுதலை வேண்டி காவற்துறை அதிகாரிக்கு 100 மில்லியன் வழங்கிய பசில்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தன்னை விடுதலை செய்ய காவற்துறை உயர் அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தகவல் வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,
அரசியல்வாதி ஒருவர் தன்னை விடுதலை செய்ய கோரி காவற்துறை அதிகாரி ஒருவருக்கு 100 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக கூறினார்.
எனினும் அந்த அரசியல்வாதி யார் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவே அந்த அரசியல்வாதி என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தில் அனைத்து பொருளாதார விடயங்களை தன்வசப்படுத்தி கொண்டு அவற்றின் மூலம் பசில் ராஜபக்ச கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இதனால், அவரை தவிர எந்த அரசியல்வாதிக்கும் இந்த பெருந்தொகை பணத்தை செலுத்தும் பொருளாதார பலமில்லை எனவும் அந்த இணையத்தளம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment