கிணற்றிற்குள் விழுந்து இளம்பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த பரிதாப சம்பவம் நேற்று நண்பகல் வடமராட்சி கிழக்கு குடத்தனையில் நடந்துள்ளது.
குடத்தனை கிழக்கு, குடத்தனையை சேர்ந்த ஞானசிகாமணி பிரபாலினி (30) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்ணின் தாய் வைத்தியசாலைக்கு சென்றுவிட்டதாகவும், சகோதரன் வெளியில் சென்ற நிலையில், அந்த யுவதி மாத்திரமே வீட்டில் தனித்திருந்திருக்கிறார்.
வீட்டிற்கு வந்தவர்கள், அவரை காணாமல் தேடிய சமயத்தில் கிணற்றிற்குள் சடலமாக காணப்பட்டுள்ளார்.
வலிப்பு நோயுடைய இவர், தண்ணீர் எடுப்பதற்காக கிணற்றடிக்கு சென்ற சமயத்தில் விழுந்திருக்கலாமென கருதப்படுகிறது.
No comments:
Post a Comment