June 12, 2015

கள்ளக்கையெழுத்து போட்டு விளம்பரம் செய்த மகிந்த அணி!

மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்திற்கும் சுதந்திரக் கட்சிக்கும் தொடர்பு கிடையாது என கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த அதிரடியாக அறிவித்துள்ளார்.

“பாரிய போராட்டத்தை ஆரம்பிக்க மாத்தறையில் கூடவும்” என்ற தொனிப் பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பினர், இன்று பெரிய கூட்டமொன்றை நடத்த உள்ளனர். இந்த கூட்டத்துடன் சுதந்திரக்கட்சிக்கும் தொடர்புள்ளது என்பதைப் போன்ற பிரச்சாரத்தையும், சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் மகிந்த அணி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது.
இந்த நிலையில், அதனை மறுத்துள்ளது சுதந்திரக்கட்சி. அத்துடன், சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜயந்தின் பொய்க்கையெழுத்தை பாவித்து விளம்பரங்கள் வெளியிடப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தை நடத்தும் ஏற்பாடுகள் மற்றும் அழைப்பு விடுத்தல் போன்றவற்றுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தொடர்பு கிடையாது.
இந்தக் கூட்டம் தொடர்பில் நேற்றைய நாளிதழ்களில் வெளியாகியிருந்த அறிவிப்பு பற்றி எமக்கு தெரியாது.
கட்சியின் அனுமதியின்றியே எனது கையொப்பத்தை பயன்படுத்தி கூட்டத்திற்காக இவ்வாறு நேற்று நாளிதழ்களில் விளம்பர அறிக்கை வெளியிடப்பட்டிருந்தாக சுசில் பிரேமஜயந்த சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment