June 5, 2015

டக்ளசிற்கு எதிராக ஊழல்முறைப்பாடு: பணத்தை திருப்பிக் கேட்கிறது பாரஊர்தி சங்கம்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எதி­ராக யாழ். மாவட்ட பார­ஊர்­திகள் உரி­மை­யாளர் சங்­கத்­தினர் ஊழல் ஒழிப்பு குழு செய­ல­கத்தில் முறைப்­பா­டொன்றை முன்­வைத்­துள்­ளனர். கடந்த ஐந்து ஆண்­டு­களில் இரண்டு கோடி ரூபா பணம் சட்­ட­வி­ரோ­த­மாக அற­வி­டப்­பட்­டுள்ள­தா­கவும்
அவற்றை உட­ன­டி­யாக திருப்­பித்த­ரும்­ப­டியும் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.
யாழ்.மாவட்ட பார­ஊர்­திகள் உரி­மை­யாளர் சங்­கத்­தினர் நேற்று காலை கொழும்பு கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஊழல் ஒழிப்பு குழு செய­ல­கத்தில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எதி­ராக முறைப்­பா­டொன்றை செய்­தி­ருந்­தனர். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் தலை­மையில் யாழ். மாவட்ட பார­ஊர்­திகள் உரி­மை­யா­ளர்கள் சங்கத்தின் இந்த முறைப்­பாட்டை செய்­துள்­ளனர். முறைப்­பாட்டை செய்­த­பின்னர் சுமந்­திரன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்-
‘முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தா­வுக்கு எதி­ராக யாழ்.மாவட்ட பார­ஊர்­திகள் உரி­மை­யா­ளர்கள் சங்கத்தினர் இன்­று (நேற்று) முறைப்­பா­டொன்றை செய்­துள்­ளனர். அதா­வது கடந்த 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த சங்­கத்­தி­னூ­டாக தொழில் புரியும் நபர்­களின் ஒவ்­வொரு வாக­னத்­துக்கும் ஐந்து ஆயிரம் ரூபாய் அடிப்­ப­டையில் அற­விட்­டுள்­ள­துடன் அதற்கு மேலா­கவும் ஒவ்­வொரு பய­ணத்­துக்கும் 300 ரூபாய் அடிப்­ப­டையில் அற­விட்­டுள்ளது.
இந்த பணத்­தொகை ஏறத்­தாழ இரண்டு கோடி ரூபாய் அளவில் உள்­ளது. அதை திருப்பி வழங்க நட­வ­டிக்­கை எடுக்­கும்­ப­டி முறை­யிட்­டுள்­ளனர்.
அதேபோல் இது­வரை காலமும் இந்த பார­ஊர்­தி­களை மணல் ஏற்­று­வ­தற்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர். ஆனால் மணல் வியா­பா­ரத்­திலும் பாரிய ஊழல் இடம்­பெற்­றுள்­ள­தா­க முறைப்­பா­டுகள் இருக்­கின்­றன. அவை சம்­பந்­த­மான மேல­திக முறைப்­பா­டு­களும் எதிர்­வரும் காலங்­களில் செய்­யப்­படும். ஏரா­ள­மான பணத்தை மக்­க­ளிடம் அற­விட்டு பொது மக்­களை கஷ்­டப்­ப­டுத்தி உள்­ளனர். பொது மக்­களின் பணத்தை ஏமாற்றி அற­விட்­டுள்­ளனர். மேலும் இவ்­வா­றான மோச­டிகள் கடந்த பல ஆண்­டு­க­ளாக நடை­பெற்று இருக்­கின்ற நிலையில் பயத்தின் கார­ண­மாக வாய் மூடி இருந்த மக்கள் இன்று தமது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் ஆகவே உடனடியாக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும்படி நான் முறைப்பாடு செய்துள்ளேன்’ எனக் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment