June 5, 2015

மஹிந்த அரசின் திட்டமிட்ட இன அழிப்பின் அறுவடைகளை நாம் அனுபவிக்கிறோம்: சி.சிறீதரன் பா.உ!

கடந்த காலத்தில் மாயவலை விரித்து ஆடம்பரங்களையும் கட்டற்ற கலாசாரத்தை சீரழிக்கும் விடயங்களையும் பரவவிட்ட மஹிந்த அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பின் அறுவடைகளை நாம் இன்று அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கிளிநொச்சி பளை தர்மக்கேணியில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கின் வந்தமென்றும் வாழ்வு எழுச்சி என்றும் பெயர்களை சூட்டிக்கொண்டு அதன் நிழல்களில் எமது பாரம்பரிய நிலத்தில் நச்சு விதைகளை தூவி எமது இளைய சமுதாயத்தை திசை திருப்பி எமக்குள் குரோதங்களையும் பிணக்குகளையும் ஏற்படுத்தி எம்மை நாமே அழித்துக்கொள்ளும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த நிலையை எதிர்பார்த்த சக்திகள் சந்தேசப்படுகின்றன. எனவே எமக்குள் எம் இளைய சமுதாயத்துள் விழிப்புணர்வு தேவைப்படுகின்றது.அதன் மூலம் தொடர்ந்தும் எமது சமுகம் கலாச்சார சீரழிவுக்குள் தள்ளப்படாதவாறு தடுக்க வேண்டும். இதற்கு கிராமங்களில் இளைஞர்கள் மூத்தவர்கள் ஒன்றினைந்த செயற்றிட்டங்களை வகுத்து பயணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழக 2ம் வருட மாணவன் கோகுல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணித்தலைவர் சுரேன், பச்சிலைப்பள்ள மாற்றுவலுவுள்ளார் சங்க தலைவர் ரவீந்திரன் பூதவராயன், விளையாட்டுக்கழக தலைவர் சு.சிந்துஜன், கிராம அலுவலர் பரன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment