சிவாஜிலிங்கம்ஈழத்தமிழர்கள் உண்மையான நண்பனொருவனை இழந்து மீண்டும் அநாதரவாகியிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளனர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா.
தமிழின உணர்வாளரும் திரைப்பட முன்னணி இயக்குநருமான மணிவண்ணனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையினில் அவர்கள் விடுத்த அஞ்சலிக்குறிப்பினிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். மணிவண்ணனின் இழப்பு தமிழ் திரையுலகிற்கு ஏற்பட்ட இழப்பினை விட ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
ஈழப்போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியினில் தமிழகத்தினில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களினில் எல்லாம் மணிவண்ணன் பங்கெடுத்திருந்தார். அவ்வேளையினில் நாமும் அங்கு சிக்குண்டிருந்த நிலையினில் போராட்டங்களினில் இணைந்து பங்கெடுத்திருந்தோம். அவ்வேளையினில் எல்லாம் மணிவண்ணனினது உணர்வு பூர்வமான பங்களிப்புக்களையெல்லாம் கண்கூடாக கண்டிருந்தோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான சூழலினில் கூட தனது மரணத்தை சந்திக்கும் கணம் வரையினில் தனது நிலைப்பாட்டினில் உறுதியாக நின்றிருந்த மணிவண்ணனது பிரிவு தமிழ் மக்களுக்கு பெரும் கவலையினை தந்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் சிறீகாந்தா ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அஞ்சலிக்கூறிப்பினில் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment