June 15, 2015

யேர்மனியில் வில்லிஸ் நகரத்தில் நடைபெற்ற மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி 2015 !

 யேர்மனியில் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி வழமை போன்று 5 தொகுதிகளில் ஒழுங்கு செய்யப்பட்ட அடிப்படையில் முதலாவதாக கடந்த 13.6.2015 அன்று சனிக்கிழமை யேர்மனி வில்லிஸ் நகரில்
மிகவும் சிறப்பாக நடைபெற்றது. யேர்மனி மத்தியமாநிலம் ஒன்றில் உள்ள தமிழாலயங்கள் கொட்டும் மழையிலும் மிக ஆர்வத்துடன் பங்கேற்றனர்.யேர்மனிய மற்றும் தமிழீழத் தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டது . அதனைத் தொடர்ந்து தமிழாலயங்களின் வீரர்களும் வீராங்கணைகளும் இணைந்து விளையாட்டு ஆரம்ப தீபத்தை மிகச்சிறப்பாக ஏற்றிவைத்தனர். அத்தோடு தமிழாலய மாணவர்களின் அணிவகுப்பு கொட்டும் மழையில் சிறப்பாக நடைபெற்ற நிகழ்வு அனைவரின் வரவேற்பைப் பெற்றது.
வினோத உடைப்போட்டியில் கலந்துகொண்ட மாணவர்கள் தாயக உறவுகளின் கொடிய நிலைமைகளை நினைவுபடுத்தி இவ் நிகழ்வில் கலந்துகொண்ட மக்களை சிந்திக்க வைத்தது நடுவர்களால் பாராட்டப்பட்டது .
ஆர்வத்துடன் கலந்துகொண்ட மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. வெற்றிபெற்ற வீரர்களுக்கும் வீராங்கணைகளுக்கும் பதக்கங்களும் வெற்றிக் கேடயமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. மேலும் பங்குபற்றிய தழிழாலயங்களில் முதலாமிடத்தை முன்சன்கிளட்பாக் தமிழாலயமும் இரண்டாம் இடத்தை கிறிபில் தமிழாலயமும்,மூன்றாமிடத்தை மேபுஸ் தமிழாலயமும் பெற்றுக் கொண்டன. அவர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டது.அத்தோடு தேசியக் கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவடைந்த து.


























No comments:

Post a Comment