தமிழ்த் திரையுலகில் என்றுமே அழிக்க முடியாத பல்வேறு படைப்புகளை வழங்கிய இயங்குனர் மணிவண்ணன் அவர்கள் நம்மைவிட்டு நீங்கிவிட்டதை எண்ணி நோர்வே தமிழர்கள் அனைவரும் மீளாத் துயரடைந்திருகிறார்கள்.
சமகால அரசியலையும் சமகால சமூக அவலங்களையும் துணிச்சலாக எடுத்துரைக்கும் படைப்பாளிகள் வெகு சிலரே. எண்ணி துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவதெல்லாம் இழுக்கு என்று சொல்லிலும் செயலிலும் வீரத்தையும் நேர்மையையும் காட்டியவர் இயக்குனர் மணிவண்ணன்.
வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக தமிழ்த் தேசிய கொள்கை பற்றாளனாக தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களை வழிநடத்தும் ஆசானாக புது அரசியலை உருவாக்கும் ஆற்றல் படைத்த அரசியல் சிற்பியாகஇ இயக்குனராக நடிகனாக கதை ஆசிரியராக மேடை பேச்சாளனாக இவர் வகித்த பங்கை தமிழ் உலகம் உள்ளவரை யாரும் மறந்துவிட முடியாது. தமிழ்த் திரையுலகில் புது சரித்திரம் படைத்த படைப்பாளி இன்று சரித்திரம் ஆகிவிட்டார்.
தமிழ் ஈழ செயற்பாட்டாளர் அமரர் மணிவண்ணன் அவர்களை நோர்வே வாழ் தமிழ் ஈழ மக்களை சந்திப்பதை பெரும் பாக்கியமாக கருதினார். தனது உடல் நலக் குறைவினை பொறுப்படுத்தாது தமிழ் ஈழ மக்களை மிக அண்மையில் சந்தித்ததுடன், நோர்வேயில் இயங்கும் தமிழ்ப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களை சந்தித்து கலந்துறவாடினார்.
இயக்குனர் மணிவண்ணன் அவர்களது பிரிவை எண்ணி வாடும் உலகத்தமிழர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நோர்வே வாழ் தமிழர்கள் சார்பாக நோர்வே ஈழத்தமிழர் அவை ஆறுதலை சொல்லிக்கொள்கிறது. இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு அகவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ளும் இதேவேளையில்இ அவரது லட்சியங்களை சுமக்க இருக்கும் தமிழக இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் நோர்வே ஈழத்தமிழர் அவை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவண்ணம்
நோர்வே ஈழத்தமிழர் அவை

No comments:
Post a Comment