June 16, 2015

தமிழ்த் தேசத்தின் விடிவுக்காய் உழைத்த மனிதர இயக்குனர் மணிவண்ணனுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி!

தமிழ்த் இனப் பற்றாளரும் இயக்குனருமான பெருமதிப்பிற்குரிய மணிவண்ணன் அவர்கள் 15-06-2013 அன்று எம்மைவிட்டு மறைந்துவிட்டார் என்ற செய்திகேட்டு அதிர்ச்சியும், ஆறாத் துயரமும் அடைகின்றோம்.


எமது மக்களது விடிவுக்காக பல தசாப்தங்களாக ஓய்வின்றி உழைத்த அந்த புனிதமான மனிதர் இன்று எம்மோடு இல்லை என்ற செய்திகேட்டு ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் துயரத்தில் மூழ்கியுள்ளது.

இயக்குனர் மணிவண்ணன் அவர்கள் எமது தேசத்தையும், எமது மக்களையும், உரிமைப் போராட்டத்தையும் ஆழமாக நேசித்தவர். தமிழ்த் தேசம் இன அழிப்பில் இருந்து பாதுக்காக்கப்பட வேண்டும், எமது மக்கள் சொந்த மண்ணில் நிம்மதியாகவும் தம்மைத்தாமே ஆளும் அதிகாரத்தை பெறவேண்டும், எமது மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக அற்பணிப்புடன் உழைத்தவர்.

வன்னி இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டனர். அந்த இனப்படுகொலையிலிருந்து ஈழத்தமிழ் மக்கள் பாதுகாகக்கப்பட வேண்டுமெனக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. அப் போராட்டங்களின்போதும் மணிவண்ணன் அவர்கள் உணர்வு ப+ர்வமாக பங்குகொண்டிருந்தார்.

ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு சிங்களத்தின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபடவேண்டும் என்பதனை உறுதியுடன் வெளிப்படையாக கூறும் துணிச்சல் மிக்க கலையுலகப் போராளி.

மனித வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொண்டு, சுயநலம் என்னும் சேற்றுக்குள் புதைந்து போகமால், பொதுநல சிந்தனையுடன் பரந்த மனப்பான்மையுடனும் வாழ்ந்தவர். இன உண்வுடனும், தேசப்பற்றுடனும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர்.

ஈழத் தமிழ் இனம் சிங்கள தேசத்தின் அடிமை நிலையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாகவும், கௌரவமாகவும், வாழ்வேண்டும் என்பதனையே உயிர் மூச்சாகக் கொண்டு இறுதிவரை வாழ்ந்து இன்று எம்மை விட்டுப் பிரிந்து மீளத்துயிலில் உறங்கும் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது. அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கிறோம்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன்

No comments:

Post a Comment