June 11, 2015

மன்னார் கடற்கரையில் கரை ஒதுங்கிய மனித உரு சிலை!

மன்னார் பியர் பகுதிக் கடற்கரையில் மரத்தினால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

தலைமன்னார் பியர்பகுதியில் பழைய பாலத்தை அண்டிய கடற்கரையில் நேற்று புதன்கிழமை மாலை மரத்தால் உருவாக்கப்பட்ட மனித உருவிலான 5½ அடி உயரமுள்ள சிலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இதனை அவதானித்த கிராம மக்கள் குறித்த விடயம் தொடர்பாக தலைமன்னார் கிராம அலுவலரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இன்று காலை இந்தச் சிலை மீட்கப்பட்டு கிராம அலுவலரின் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக மன்னார் பிரதேச செயலாளருக்கு கிராம அலுவலர் தகவல் வழங்கியுள்ளார்.
m 2

No comments:

Post a Comment