June 25, 2015

மாணவியை துஷ்பிரயோகம் செய்து வீடியோ எடுத்து விற்பனை செய்த காமுகர்கள்!

மாணவி துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறையில் பாடசாலை மாணவியொருவரை விடுதிக்கு கொண்டு சென்று பாலியல் வன்புணர்வு செய்ததுடன், அதனை வீடியோப்படம் பிடித்து
விற்பனை செய்த காமுகர்கள் ஆறுபேரை பொலிசார் கைது செய்துள்ளனர். தொடங்கொட பகுதியில் 15 வயதான மாணவியொருவரே இவ்வாறு சீரழிக்கப்பட்டுள்ளார். அவரை வேட்டையாடிய காமுகர்கள் 18 மற்றும் 19 வயதானவர்கள்.
இந்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றுகிறார். தந்தையார் பாடசாலை வாகன சாரதியாக உள்ளார். மாணவி பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார்.
இந்த மாணவிக்கு காதலன் ஒருவர் உள்ளார். அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்று இந்த காமுகர்களிடம் சிக்கியுள்ளது. இதனை வைத்து, மாணவியை மிரட்டி விடுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து மாணவியை வேட்டையாடியதுடன், பல்வேறு கோணங்களிலும் அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அதனை நல்லவிலைக்கு விற்றும் விட்டனர்.
வீடியோ பல்வேறு இடங்களிலும் உலாவத் தொடங்கிய பின்னர்தான் விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்த விசாரணையில் இறங்கிய பொலிசார், காமுகர்களை கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment