வீடு ஒன்றினுள் அத்துமீறி புகுந்து தும்புத்தடி ஒன்றினால் குடும்பஸ்தரை கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்திற்காக காரைநகர் பிரதேசசபைத் தலைவர் ஆனைமுகனைப் பொலிசார் நேற்றுக் கைது செய்தனர்.
காரைநகர் – வலந்தலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி நால்வருடன் வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஆனைமுகன் அங்கிருந்த தும்புத்தடியை எடுத்து கே.கிரிஷாந்தன் (வயது 30) என்பவரைக் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தினார்.
அத்துடன் அவரின் உடைமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தினார் எனத் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்த குடும்பஸ்தர் யாழப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இதன் பின்னர் கடந்த 8 ஆம் திகதி இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
இதையடுத்து அவரையும் அவருடன் சென்றோர் எனக் கருதப்படும் நால்வரையும் நேற்று சனிக்கிழமை கைது செய்தனர்.
இவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறை நீதிவானின் இல்லத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment