June 14, 2015

ரவீந்திர நாத் தாகூரின் 154 ஆவது பிறந்த தினம் யாழில் கொண்டாடப்பட்டது.!

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் , சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் இந் நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில்
பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டனர்.
அத்துடன் யாழ்.இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் ,யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சல் எஸ்.டி. மூர்த்தி, வடமாகாண ஆளுனரின் செயலாளர் எஸ்.இளங்கோவன் யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் ரவீந்திர நாத் தாகூரின் கவிதை ஒன்றினை யாழ்.பல்கலைகழக மாணவி கவிஞர் ரோகின் றோயிஷா அவர்கள் வாசித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
IMG_0695
IMG_0693
IMG_0687
IMG_0681
IMG_0678
IMG_0674

No comments:

Post a Comment