June 4, 2015

21 வயதிற்கு குறைந்தவர்கள் புகைப்பொருட்களை வாங்கவோ விற்கவோ முடியாது!

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலையங்களுக்கு புகைப்பொருள் விற்பனை தொடர்பான சுகாதார சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பாக விளக்கமளித்து வருவதாக தெல்லிப்பழை சுகாதார மருத்துவ பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்படி புகைப்பொருள்கள் விற்பனை செய்கின்ற கடைகளில் 21 வயதிற்கு குறைந்த எவரும் புகைப்பொருட்களை விற்பனை செய்யவோ, கொள்வனவு செய்ய முடியாது என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வெற்றிலை கூறுகளில் சேர்க்கப்படுகின்ற புகையிலைகளும் பொதி செய்யப்பட்டு அவற்றில் அரசாங்க புகைப்பொருள் எச்சரிக்கை இணைக்கப்பட்டே விற்பனை செய்யப்பட வேண்டும்.
இச் செயற்பாட்டின் போது விற்பனையாளர்கள் தாமாகவே முன் வந்து புகைப்பொருட்கள் விற்பனையினை குறைக்கக்கூடிய வாய்ப்புள்ளதாகவும், மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக அவதானமாக செயற்படுதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்ததாக சுகாதார மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment