June 4, 2015

நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் பலியான மாணவர்களுக்காக நினைவு தூபி(படங்கள் இணைப்பு)

விமானத் தாக்குதலின் போது பலியான நாகர்கோவில் மத்திய மகா வித்தியாலத்தின் 21 மாணவர்களுக்கான நினைவு தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
20 வருடங்களுக்கு முன் (22-09-1995)  இலங்கை வான் படையினரால்
மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலின் போது 21 மாணவர்கள் ஸதலத்திலேயே உயிரிழந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த மாணவர்களின் நினைவாக அமைக்கப்படவுள்ள நினைவு தூபிக்கான அடிக்கல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரால் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கடந்த 2ம் திகதி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்வி வலய பணிப்பாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்விற்குரிய ஏற்பாட்டினை வடமாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் மேற்கொண்டிருந்தார்.

No comments:

Post a Comment