June 15, 2015

யேர்மனியில் எழுச்சிபூர்வமாக நடைபெற்ற தமிழீழ மாணவர் எழுச்சி நாள் – 2015 !

05.06.1974 அன்று மாவீரனாய் தாய் மண்ணை முத்தமிட்ட தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் ஜூன் 6ம் நாள் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் உலகம் முழுதும் பரவி வாழும் தமிழ் மக்களால்
கடைபிடிக்கப்பட்டு வருகிறது.அவ்வகையில் தமிழீழ மாணவர் எழுச்சி நாள் யேர்மனியின் வூப்பெற்றால் (Wuppertal) நகரில் நேற்றைய தினம் (13.06.2015) மிகவும் எழுச்சிபூர்வமாக தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியால் முன்னெடுக்கப்பட்டது.

பொதுச்சுடரேட்டலைத் தொடர்ந்து ஈகைச்சுடரேட்டலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. பொதுச்சுடரை மாநில பொறுப்பாளர் திரு. சிறிகந்தவேல் அவர்களும் ஈகைச்சுடரினை தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் துணைப்பொறுப்பாளர் செல்வி சினேகா அவர்களும் ஏற்றி வைத்தனர். அதனைத்தொடர்ந்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தியாகி பொன் சிவகுமாரன் அவர்களின் தமிழீழம் சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாக தமிழ் இளையோர் அமைப்பினரால் உரையாற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து தமிழீழ எழுச்சி பாடல்களும், நடன ஆசிரியர்களான லாவன்யா, சரண்யா மற்றும் சாவித்திரி அவர்களின் மாணவர்களின் எழுச்சி நடனங்களும் நடைபெற்றது.தமிழீழத்தில் மக்களிற்கு இழைக்கப்படும் அநீதிகளை பற்றியும் குறிப்பாக தமிழ் மாணவிகள் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான நாடகமும், தமிழீழ மக்களின் எழுச்சியை பிரதிபலிக்கும் நிழல் நாடகமும் தமிழ் இளையோர் அமைப்பால் நடாத்தப்பட்டது.
சிறப்புரையாற்றிய தமிழ் உணர்வாளர் திருச்செல்வம் அவர்கள் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனியின் செயற்பாடுகளை பாராட்டியும், சமகால அரசியல் நிலைமைகளை பற்றியும், எதிர்காலத்தில் தமிழர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றியும் உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழீழத்தை வெல்லும்வரை அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனும் உறுதிமொழியுடன், எழுச்சி நாளின் நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் எழுச்சி நிகழ்வு நிறைவுசெய்யப்பட்டது._DSC0695_1_DSC0697_1

  _DSC0721_1 _DSC0730_1 _DSC0735_1 _DSC0742_1 _DSC0771_1 _DSC0787_1 _DSC0792_1 _DSC0849_1 _DSC0862_1 _DSC0883_1 _DSC0886_1 _DSC0918 _DSC5920 _DSC5927 _DSC5933 _DSC5944 _DSC5959 _DSC5974 _DSC5977

No comments:

Post a Comment