May 16, 2015

"முள்ளிவாய்கால் முற்றம் " எனும் நூல் இதழ் 4 சிறுவர்களின் படைப்பாக யேர்மனியில் வெளியிடப்பட்டது(படங்கள் இணைப்பு)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக " முள்ளிவாய்கால் முற்றம் "   எனும் நூல்  இதழ் 4 சிறுவர்களின் படைப்பாக யேர்மனியில் வெளியிடப்பட்டது.

நேற்று 15.05.2015 அன்று யேர்மனி பெர்லின் நகரில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களை நினைவுகூரும் முகமாக " முள்ளிவாய்கால் முற்றம் "   எனும் நூல்  இதழ் 4 சிறுவர்களின் படைப்பாக யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால்  வெளியிடப்பட்டது .
நிகழ்வின் ஆரம்பமாக முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் இறுதி நேரத்திலும் உறுதி தளராமல் களமாடி காவியமாகிய மாவீரர்களுக்கும் மக்களுக்கும் பொதுச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் அகவணக்கம் செலுத்தப்பட்டது . அதை தொடர்ந்து  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக சிறுவர்களின் ஓவியம் , கவிதை , கட்டுரை என முழுமையான ஆக்கங்களை கொண்டு " முள்ளிவாய்கால் முற்றம் " எனும் நூல் இதழ் 4 வெளியிடப்பட்டது . வெளியீட்டை தொடர்ந்து சிறுவர்கள் தமது ஆக்கங்களை வழங்கினர் ." முள்ளிவாய்கால் முற்றம் "  நூலில் எமது உறவுகள் பட்ட வலியை எடுத்துரைக்கும் முகமாக கலை ஆக்கங்கள் சிறுவர்களால் மிக உணர்வுபூர்வமாக வரையப்பட்டது .







No comments:

Post a Comment