அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தமிழரான மயூரன் சுகுமாரனை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற இன்னும் நேரம் இருப்பதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜுலி பிஷப் இதனைத் தெரிவித்துள்ளார்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள மயூரன் சுகுமாரன் உள்ளிட்ட இரண்டு அவுஸ்திரேலியர்களை மீட்பதற்கான முயற்சிகளை அவுஸ்திரேலியா மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சிறைக்கைதிகளின் பரிமாற்றத் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்வைத்திருந்த போதும், அதனை இந்தோனேசியா நிராகரித்திருந்தது.
எனினும் இன்னும் இது குறித்து இந்தோனேசிய ஜனாதிபதி சாதகமான முடிவை மேற்கொள்வார் என்று நம்புவதாக ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவர்களின் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள தினம் குறித்து எதிர்வரும் ஓரிரு தினங்களில் இந்தோனேசிய சட்ட மா அதிபர் தீர்மானிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment